தாண்டிக்குளம் வரை யாழ்தேவியும்…. வவுனியாவிலிருந்து மனிக்பாம் வரை பஸ்சில் நானும்…….

imagesஎன் ரயில் பயணங்கள் மற்றும் பஸ் பயணங்கள்images1 எனது எட்டாம் வகுப்பில் ஆரம்பித்தது. இந்த பயணங்கள் மூலம் பல விதமான அனுபங்களை கண்டிருக்கிறேன்.அதில் காதல் , துக்கம், பாசம், கோபம், நட்பு,என பல வேறுபட்ட விதங்களில் அவை என் வாழ்வுக்கும் புடம் images2போட்டன.கடந்த கால வன்னிப் போருக்குள் அகப்பட்ட மக்களுக்குள் என் குடும்பமும் அடங்கும். Continue reading

Advertisements

டில்ஷானின் அதிரடியுடன் ஐசிசி சம்பியன் தொடரை முதல் வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை

108521.icon108508.iconஐசிசி சம்பியன் சிப் சுற்றுப் போட்டிகள் நேற்று தென்னாபிரிக்காவின் ஆரம்பமானது.இதில் “பி” பிரிவுக்கான முதலாவது போட்டியில் ஐசிசி தர வரிசையில் முதல் நிலையிலுள்ள தென்னாபிரிக்க அணியும் 5ம் நிலையிலிருக்கும் இலங்கை அணியும் மோதிக் கொண்டன.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணித் தலைவர்  ஸ்மித் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கைக்கு வழங்கினார். Continue reading

தாயே உன்மடி ???

கண்ணுபட போகுதய்யா

என் கண்மணியே ……..என்று

அரவணைத்து நெற்றிப் பொட்டிட்ட

தாய்மடியின் தாரை அன்பு தனை…

தேடுகின்றேன்    ????

காலத்தின் திருவிளையாட்டு

என் தாயின் அன்பு

அகதி முகாமில் அடைபட்டு.

விடுதலை பெற பிராத்திக்கின்றேன்

என் தாய் மட்டுமல்ல

என் தமிழ் மக்களும்

இப்படிக்கு அன்புடன்

சிவம்  ஜெகன்

மக்னா காட்டா உடன்படிக்கையும் அதன் உரிமைகளும்(மத்திய காலம்)

Continuity Of Human Right ……….

* 1215 இல் சட்டத்தின் ஆட்சி என்பதன் மேல் கட்டியெழுப்பப்பட்ட மக்னா காட்டாவானது (Magna Carta)பாப்பாண்டவரது நிலப்பரப்பிரபுக்களினதும் நிர்ப்பந்தத்தின் பயனாக ஜோன் மன்னனால் உருவாக்கப்பட்ட ஆவணமாகும்.இது சில சட்டங்களையும்,சட்ட ரீதியான ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்கின்றதொன்றாகும். குறிப்பாக மன்னன் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவனாக மாற்றியது. எனினும் செல்வந்தர்களுக்கு மட்டுமே உரிமைகளை வழங்கியதோடு சாதரண மக்களுக்கு எந்த வித உரிமைகளையும் வழங்கத் தவறியது. Continue reading

அற்வைஸ் சொல்லும் நாடோடிகளும் அடிவாங்கிய கந்தசாமியும்

images2மியாவ் மியாவ்  பூனை மீசையில்லா பூனை,எஸ்கீயூஸ் imagesமிஸ்டர் கந்தசாமி,என் பேரு மீனாக் குமாரி என்ற விக்கரமின்  கந்தசாமி பட பாடல்கள் இன்றைய இளசுகளின் நாவில் முணு முணுக்கு பாடல்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. என்னடா எல்லாரும் ஒரே கந்தசாமி கதையா இருக்கிறாங்க எண்டு தியோட்டரில் படம் பார்க்க ஆவல் இல்லாததால்  ஒரு கந்தசாமி DVD Copy ஒண்டு வாங்கிப் பார்த்தேன்.கொலிவுட் படம் போல் பண்ண முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சுசி க​ணேசன். Continue reading

மனித உரிமைகளும் அதன் இன்றைய வளர்ச்சியும்

இன்றைய உலகில் மனித உரிமைகள் பற்றிய எண்ணக்கரு வளர்ச்சியடைந்து வருகிறது. மனித உரிமை பற்றிய நல்லெண்ண வெளிப்பாடுகள் மேற்குலக நாடுகளினாலே வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.மனித உரிமைகளின் வளர்சிகளுக்கான நிதி,அதன் மேம்பாடுகளுக்கான திட்டங்கள்,அதனை முன்னின்று செயற்படுத்துவது போன்றவற்றில் மேற்குலக நாடுகளே முன்னின்று செயற்பட்டு வருகின்றது.ஆனாலும் ஆசிய நாடுகளினாலேயே மனித உரிமை பற்றிய எண்ணக்கரு தோற்றம் பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன.இந்த தொடர் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ,தற்போது மனித உரிமைகள் பற்றிய கற்கையை மேற்கொள்பவர்களுக்காகவும்,இது பற்றிய தகவல் அறிய ஆர்வமிள்ளவர்களுக்காக வருகிறது இந்தத் தொடர்…. Continue reading

பெண்ணே……….

shaliniதும்மும் போதெல்லாம்

நினைத்துக் கொண்டேன்

நீ என்னை நினைப்பதாய்

டாக்டர் சொன்ன பின்பு தான்

தெரிந்து கொண்டேன்

அது நீயல்ல வைரஸ் என்று…..

என்றும் அன்புடன்

சிவம் ஜெகன்