கண்ணகையே உனக்கம்மா

வீரம் கொண்ட முல்லையிலே
வற்றாப்பளை என்னும் இடத்தில்
கடல் கொண்ட கரையினிலே
பள்ளி கொண்ட என் தாயே
கண்ணகை அம்பாளே……….
வைகாசி பிறந்தது உனக்கம்மா?
காவடியும் பால் குட பவனியும்
பக்தி கொண்ட பக்தரின் தூக்கு காவடியும்
உனக்கே அம்மா….
அருள் தந்து அடைக்கலம் தந்து
பாதுகாத்த உனக்கு இன்று
பொங்கல் திருவிழா …
மறக்கவில்லை உன்னை நாமம்மா
இழந்து விட்ட உறவுகள் கூட
மறந்து விட்டு வந்தோம் அம்மா
உன் திருதலம் தேடி
கடந்து விட்ட காலத்தில்
ஏனம்மா எம்மை மறந்து விட்டாய்?
குருடு என்றும் செவிடு என்று
ஊனம் என்றும் சித்தம் கலங்கிய
உறவொன்றும் உன் பிள்ளைகளை
ஏனம்மா அலையவிட்டாய்?
யாம் செய்த தவறென்ன?
பிறந்து விட்ட வீர மண்ணில்
இறந்துவிட்ட எம் உறவுகளை
உன்னடியில் சேர்திடம்மா
வீடுபேற்றைக் கொடுத்திடம்மா
விலையில்லா உன் பிள்ளை
வீடற்று நாடற்று வீதியிலே கிடக்குதம்மா?
கடல் நீரின் விளக்கெரியும் விந்தையும்
உன் திருத்தலத்தில் கண்டோமம்மா?
யாருமில்லை எமக்குதவ உன்னை விட்டால்
வேண்டுகிறோம் உன்பாதம் தொட்டு
வேண்டாம் அம்மா எமக்கு வீதியோர வாழ்வு
பக்தியுடன் வரும் உன் பக்தருக்கும்,
உன்னை நினைந்து துதிக்கும் உன் பிள்ளைக்கும்
நினைக்க நினைவின்றி ஆகி விட்ட
உன் உறவுக்கும் உன் அருள் கிடைக்க
பிராத்திகின்றேன் இந்த பொங்கல் நாளில்……..
தொலைவில் இருந்து
வெகு விரைவில் உன் திருபாதம் காண்பேன்
என்ற நினைவுகளுடன்…

Advertisements

நான் கோழையடி

நீ கிட்டத்தில் இருப்பதனால் தானடி
உன்னிடம் சொல்ல துடிக்கும் வார்த்தைகள்
எட்டத்தில் வைத்திருக்கிறேன்….
எட்டத்தில் உள்ளவார்த்தைகளை
கிட்டத்தில் சொன்னால் நீ நீ
எட்டமாய் போய் விடுவாய் என்பதால்
அதனால் தானடி இப்போதும் நான் கோழையடி??