புலமைச் சொத்துரிமைச் சட்டமும் இன்றைய தனியார் இலத்திரனியல் ஊடகங்களும்

தொலைகாட்சியில் விளையாட்டுச்செய்தி

தொலைகாட்சியில் விளையாட்டுச்செய்தி

சற்று நாட்களுக்கு முன்பு எங்கள் தனியார்

வானொலியில் விளையாட்டுச்செய்தி

வானொலியில் விளையாட்டுச்செய்தி

வானொலிகளில் ஒரு சுவார்சியமான சம்பவம் அல்லது இளசுகளின் மனதைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி நடந்தேறியது.அது புதிய விடயம் அல்ல சீசனுக்கு சீசன் நடக்கும் நிகழ்வு தான்.அண்மையில் தென்னாபிரிக்காவில் நடந்து முடிந்த  ஐசிசி சம்பியன்ஸ் சிப் போட்டிகள் பற்றியது தான் அந்த நிகழ்வு. Continue reading

Advertisements

நாளொரு மணிமொழி

உன் கையில் உள்ள பொருளை அனுபவித்து நீ சந்தோஷப்படாத போது மேலதிகப் பொருளைப் பெற்று விட்ட போதிலும்.நீ சந்தோஷப்பட முடியுமென உறுதுயாகக் கூறுவது சாத்தியமன்று

நடப்புச் சம்பியன் நடக்கிறது 2009 இல் புதிய சம்பியனாய்……….

75178.iconநெறகிரிக்கெட்டின் தாயகம்   இங்கிலாந்தாக 109136.iconewஇருந்தாலும் 2009 ம்ஆண்டு தென்னாபிரிக்காவில் இடம்பெற்று முடிந்த ஐசியின் மினி உலககிண்ண அரையிறுதியில் அவுஸ்ரேலிய அணிஇங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.நேற்று இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து நடப்புச் சம்பியன் பட்டத்தை மீண்டும் தனதாக்கியது.  அன்றைய டொன் பிரட்மன் ,அதைத் தொடர்ந்து ஸ்ரிவோ, இன்று 30  வயதைக்  கடந்தாலும் சிறந்த தலைமைத்துவத்துடன் அணியை வழிநடத்துகிறார் றிக்கி. கடந்த 2007 ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணியை வென்று அவுஸ்ரேலியா மூன்றாவது முறையாக உலக கிண்ணத்தை தனதாக்கியது. Continue reading

யாழ்தேவியுன் மனிக்பாம் நோக்கிய என் பயணத்தின் தொடர்ச்சி….மனிதாபிமானம் பெரிதா?240 கிலோமீற்றர் தூரம் பெரிதா?

இவ்வாறு ஒருவாறு கிளம்பிய யாழ்தேவி புகையிரதம் மருதானையை தாண்டிக்கொண்டு சென்று கொண்டிருந்து.அடி பிடிப்பட்டு ஏறியவர்கள் சீற் இருக்கும் இடத்தை நோக்கி தேடல்களுடன் அங்கும் இங்கும் நடைபயின்ற வண்ணம் இருந்தனர் வயது வேறுபாடு இன்றி.என் உள்மனது சொன்னது ஐயோ பாவம் ஆனாலும் ஏற்கனவே ஒரு சீற் பிடித்து கொடுத்தேன் பிறகு நான் எழும்பி மற்றவருக்கு இடம் கொடுப்பதற்கு என்மனம் இடம் தரவில்லை.

இப்படி நேரம் சென்று கொண்டிருக்கும் போது ஒரு தமிழ் வயோதிபப் பெண் பயணிகள் செல்லும் பாதையில் உட்கார்து விட்டார்.இதனால் பயணிகள் அவரை கடந்து செல்ல முடியாமல் இருந்து. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு சிங்கள ஆண் உங்களுயை ஆட்கள் தானே எழும்பி இடம் விடலாம் தானே என்று ஓர் அதிகாரத் தோரணையில் கூறினார்.ஆனாலும் அங்கிருந்தவர்கள் அதற்கு செவிசாய்ப்பதாக இல்லை நானும் கூடத்தான். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் அவர் பேசியது என்வென்று பலருக்கு விளங்கவில்லை விளங்கியவர்கள் மௌனமாக இருந்தார்கள் கொழும்பில் இருந்து வவுனியா வரையுள்ள 240 கிலோமீற்றர் தூரத்தை நினைத்து.மனிதாபிமானத்தை 240 கிலோமீற்றர் தூரம் வென்றுவிட்டது. Continue reading

நாளொரு மணிமொழி

  • இனிய பழங்களையும் தோல் மூடிக்கொண்டிருப்பதைப்போல அறிவுள்ளவர்களையும் சில சமயம் சுயநலம் என்ற தோல் மூடிக்கொண்டிருக்கிறது.அந்தத் தோலைக் கிழித்தால் மட்டுமே பழத்தின் இனிமை பயன்படுவதைப் போல அறிவும் பயன்படும்

தொம்சன்