ஈராக் தலைநகரிலுள்ள இராணுவ ஆட்சேர்ப்பு நிலையத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதல்…

 ஈராக்கின் தலைநகர பாக்தாத்திலுள்ள இராணுவ ஆட்சேர்ப்பு நிலையத்தில் நடத்தப்பட்;ட தறகொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக ஈராக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue reading

Advertisements

சீனாவின் இரகசிய இராணுவ விஸ்தரிப்பும் அமெரிக்காவின் பீதியும்…..

சீனா தனது இராணுவ விஸ்தரிப்புக்களை இரகசியமாக மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீனா தனது இராணுவ வளர்ச்சிகளை மூடி மறைப்பது புரிந்துணர்வின்மை மற்றும் தவறான கணிப்புக்கள் ஏற்படுவதை அதிகரிக்குமென அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Continue reading

பாகிஸ்தானில் மூன்று மில்லியன் சிறுவர்களுக்கு சுகாதராப் பாதிப்புக்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஐநா எச்சரிக்கை …….

பாகிஸ்தானில் 3 தசம் 5 மில்லியன் சிறுவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதாக ஐக்கியநாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 3 தசம் 5 மில்லியன் சிறுவர்கள் நீர் சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகும் அபயாம் அதிகளில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Continue reading

இலங்கையில் அருள் தரும் கண்ணகை அம்மன் ஆலயங்களின் வரலாறு

“உலக புகழ் கற்பரசி ஊர்காக்கும் காவல் தெய்வம் சிலம்புடைத்து வழக்கு வென்று சினம் தணித்த சிலம்புச் செல்வி சலம் நிறைந்த ஆற்றோரம் நாகம் சேர கல்லடிமுனையில் நாச்சியாகி வலம் வந்தால் வரம் தருவாள் வைகாசித் திங்களிலே குளிர்த்தி பாடி குலம் விளங்கத் தாயாக்கி குழந்தை தந்தாள் வட்டுக்குத்த நலம் தருவாள் பாளையொரு பத்திரம் மஞ்சள் சேர்த்தால் நிலம் விளையும் கலைபெருகும் நவநிதியும் வளம் கொழிக்கும் நலமோங்கும் துறைநீலாவணையுர் கண்ணகைத் தாயே”

என்றும் இந்துப் பெருமக்களால் வழிபடும் தலச் சிறப்பும் தொன்மையும் மிக்க ஆலயமாகத் திகழ்வது துறைநீலாவணை பதியில் அமைந்திருந்து அருளாச்சி புரியும் கண்ணகை அம்மன் ஆலயமாகும்.ஆற்றல்கள் அனைத்தும் அருளி அண்ட சராசரங்களில் அன்னையின் வடிவில் நீக்க மற நிறைந்து அருள்பாலிப்பவள் அன்னை பராசக்தியாகும்.

புங்கமர நிழலில் நாகம் குடைபிடிக்க மங்கை வடிவாகி குன்றின் மேல் அமர்ந்து குறைகளைப் போக்கி மக்களைக் காக்கும் காவிய நாயகி துறைநீலாவணை கண்ணகை அம்மனின் டிந்த ஆண்டுக்கான உற்சவப் பெருவிழா கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகி ஜுன் முதலாம் திகதி திருக்குளிர்த்தி பாடும் வைபவத்துடன் இனிதான நிறைவுபெற்றது என்றும் பரிப+ரணி மகாசக்தி கங்கைகரையில் அமர்ந்திருந்து அருள்சுரக்கும் அற்புத சக்தியான கண்ணகை அம்மனின் சிறப்பு ஏனைய ஆலயங்களில் இருந்து வேறுபட்டதாக உள்ளது.

மட்டக்களப்பு தமிழகத்தில் சீரும் சிறப்புடனும் கல்வெட்டு மற்றும் செப்பேடுகள் உடனான கண்ணகை அம்மன் ஆலயமாக துறைநீலாவணைக் கிராமத்தின் வட அந்தத்தில் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் குன்றுகளின் மேல் அமையப் பெற்ற ஆலயமாகவுள்ளதால் இந்த ஆலயத்தை கல்லடிநாச்சியம்மன் என அழைப்பர்.

மட்டக்களப்பு வாவியை நோக்கியவாறு குன்றுகள் அனைத்தையும் தன்னகத்தே அடக்கியவாறும் சோதிட விதிப்படியும் இயற்கை அமைப்புடனும் காட்சி தருகின்ற புண்ணிய தலமாக இந்த ஆலயம் உள்ளது

இந்த ஆலயம் அமைந்துள்ள இந்தப் பிரதேசம் பண்டைக்காலத்தில் காடுகள் அடர்ந்த பிரதேசமாக விளங்கியது.இந்தப் பகுதியில் முனிவர்கள் வாழ்ந்தமையினால் இந்த ஊரின் ப+ர்வீகக்குடிகள்இந்த இடத்துக்குச் செல்ல அச்சமும் பக்தியும் உள்ளவர்களாக இருந்தார்கள் என வரலாறுகள் கூறுகின்றன.

சில காலத்தின் பின்னர் முனிவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்று சென்றதை அறிந்த மக்கள் அந்த இடத்துக்குச் செல்லத் தலைப்பட்டனர்.

இவ்வாறு சென்ற பக்தர் ஒருவர் ஒரு அதிசயத்தைக் கண்டார்.முனிவர்கள் வசித்த அந்த ஆச்சிரமம் பாழடைந்து இருந்தததையும் அதற்குப் பக்கத்திலே ஒரு புங்க மர நிழலில் சித்திர வேலைப் பாடுகளுடன் சிலம்பு கொண்ட ஒரு சிலையுமாக மூன்று சிலைகளையும் கண்ட அவர் அண்ணாந்து பார்த்தவுடன் படம் பிடித்த கோலத்துடன் உயர்சாதி நாக பாம்பு குடை பிடித்திருப்பதையும் கண்டார்.

அடுத்த பதிவில் அம்மன் அருள் தொடரும்…..

கண்ணகையே உனக்கம்மா

வீரம் கொண்ட முல்லையிலே
வற்றாப்பளை என்னும் இடத்தில்
கடல் கொண்ட கரையினிலே
பள்ளி கொண்ட என் தாயே
கண்ணகை அம்பாளே……….
வைகாசி பிறந்தது உனக்கம்மா?
காவடியும் பால் குட பவனியும்
பக்தி கொண்ட பக்தரின் தூக்கு காவடியும்
உனக்கே அம்மா….
அருள் தந்து அடைக்கலம் தந்து
பாதுகாத்த உனக்கு இன்று
பொங்கல் திருவிழா …
மறக்கவில்லை உன்னை நாமம்மா
இழந்து விட்ட உறவுகள் கூட
மறந்து விட்டு வந்தோம் அம்மா
உன் திருதலம் தேடி
கடந்து விட்ட காலத்தில்
ஏனம்மா எம்மை மறந்து விட்டாய்?
குருடு என்றும் செவிடு என்று
ஊனம் என்றும் சித்தம் கலங்கிய
உறவொன்றும் உன் பிள்ளைகளை
ஏனம்மா அலையவிட்டாய்?
யாம் செய்த தவறென்ன?
பிறந்து விட்ட வீர மண்ணில்
இறந்துவிட்ட எம் உறவுகளை
உன்னடியில் சேர்திடம்மா
வீடுபேற்றைக் கொடுத்திடம்மா
விலையில்லா உன் பிள்ளை
வீடற்று நாடற்று வீதியிலே கிடக்குதம்மா?
கடல் நீரின் விளக்கெரியும் விந்தையும்
உன் திருத்தலத்தில் கண்டோமம்மா?
யாருமில்லை எமக்குதவ உன்னை விட்டால்
வேண்டுகிறோம் உன்பாதம் தொட்டு
வேண்டாம் அம்மா எமக்கு வீதியோர வாழ்வு
பக்தியுடன் வரும் உன் பக்தருக்கும்,
உன்னை நினைந்து துதிக்கும் உன் பிள்ளைக்கும்
நினைக்க நினைவின்றி ஆகி விட்ட
உன் உறவுக்கும் உன் அருள் கிடைக்க
பிராத்திகின்றேன் இந்த பொங்கல் நாளில்……..
தொலைவில் இருந்து
வெகு விரைவில் உன் திருபாதம் காண்பேன்
என்ற நினைவுகளுடன்…

நான் கோழையடி

நீ கிட்டத்தில் இருப்பதனால் தானடி
உன்னிடம் சொல்ல துடிக்கும் வார்த்தைகள்
எட்டத்தில் வைத்திருக்கிறேன்….
எட்டத்தில் உள்ளவார்த்தைகளை
கிட்டத்தில் சொன்னால் நீ நீ
எட்டமாய் போய் விடுவாய் என்பதால்
அதனால் தானடி இப்போதும் நான் கோழையடி??