உலக கிண்ண காலப்பந்தாட்டப் போட்டிகளில் இதுவரை ஏ(யு), பி(டீ), சி(ஊ), டி(னு), குழுக்களுக்கான முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் மூன்று முன்னாள் உலக சாம்பியன்கள் உட்பட எட்டு அணிகள் தெரிவாகியுள்ளன.
இதுவரை பங்குபற்றிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே ஒரு அணி என்ற பெருமையுடன் அடுத்த சுற்றுக்கு தெரிவான அணியாக ஆர்ஜென்ரினா திகழ்கின்றது.
இதுவரை மூன்று போட்டிகளில் பங்குபற்றியுள்ள ஆர்ஜென்ரினா 9 புள்ளிகளுடன் பி குழுவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.இந்தக் குழுவில் ஆசியாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக தென் கொரிய அணி நான்கு புள்ளிகளுடன் குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த குழுவில் இருந்து கிரேக்கம் மற்றும் நைஜீரிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்த முறை இழந்துள்ளன.
ஏ குழுவில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்ட கால்பந்தாட்ட வரலாற்றில் பீபா எனப்படும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்பட்ட முதலாவது உலக கிண்ணத்தை வென்ற உருகுவே அணி ஏழு புள்ளிகளுடன் குழுவில் முதலிடத்தைப் பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
இம்முறை உலக கிண்ணத்தை கைப்பற்றும் நோக்குடன் இளமையான வீரர்களுடன் களமிறங்கியுள்ள மெக்ஸிக்கோ நான்கு புள்ளிகளைப் பெற்று ஏ குழுவில் இருந்து அடுத்த சுற்றுக்கு தெரிவான அடுத்த அணியாக திகழ்கின்றது.
இந்த குழுவில் போட்டிகளை நடத்தும் நாடான தென் ஆபிரிக்கா நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும் ஏதிரணிக்கு போட்ட கோல்கள் மற்றும் ஏதிரணியிடன் பெற்றுக்கொண்ட கோல்கள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை இழந்த மற்றுமொரு ஆபிரிக்க நாடாக உள்ளது.
இந்த குழுவில் ஒரு புள்ளிகளைப் பெற்றுள்ள முன்னாள் உலக சாம்பியனான பிரான்ஸ் அணி எதிர்பாராத விதமாக அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
குழு டி யில் நேற்று நடைபெற்ற கானா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஆறு புள்ளிகளைப் பெற்றுள்ள ஜெர்மன் அணி தட்டு தடுமாறி அடுத்த சுற்றுக்கு தெரிவானது.
இந்த குழுவில் முதலாம் இடத்தை ஜெர்மனி அணி பெற்றுள்ள போதிலும் அவர்கள் போட்டியில் விளையாடிய விதம் ஜெர்மனிய ரசிகர்களை ஏமாற்றியிருந்தது.
சேர்பிய அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஜெர்மனி தோல்வியடைந்தமை அவர்களின் உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த குழுவிலும் தலா நான்கு புள்ளிகளை கானா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் பெற்றுள்ள போதிலும் ஏதிரணியிடம் பெற்ற கோல்கள் மற்றும் எதிரணியிடம் வாங்கிய கோல்களின் அடிப்படையில் கானா அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பு கானா அணி வசமானது.
இந்த போட்டியில் கானா அணிக்கு பல கோல் போடும் வாய்ப்புக்கள் கிட்டிய போதிலும் அவர்களால் கோல் போட முடியாமல் போனது.
மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ள செர்பிய அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை இழந்தது.
ஊலக சாம்பியன ஜெர்மனி அணியை செர்பியா வெற்றி கொண்ட போதிலும் பலம் குறைந்த அவுஸ்திரேலியா மற்றும் கானா அணிகளிடம் தோல்வியைத் தழுவியமை குறிப்பிடதக்கது.
குழு சி யில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இரண்டு அணிகளும் தலா ஐந்து புள்ளிகளைப் பெற்றுள்ளன.
இந்த சுற்றுப் போட்டியில் திறமையாக விளையாடிய சிலோவேனியா இங்கிலாந்துடன் நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்ததன் காரணமாக அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை இழந்தது.
அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்ததன் காரணமாக சிலோவேனிய இந்த வாய்ப்பை இழக்க நேரிட்டது.
இங்கு இதனை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏனென்றால் இந்த போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோலைப் போட்டன.
இருப்பினும் அமெரிக்க அணியால் போட்டி முடிவடைய சற்று முன்னர் போட்ட கோலை நடுவர் நிராகரித்திருந்தார்.
நடுவர் ஏன் இந்;த தீர்ப்பு வழங்கினார் என பல தரப்பட்ட பிரிவினாலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் நான்கு புள்ளிகளைப் பெற்ற நிலையில் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை சிலேவேனியா இழந்ததுடன் ஒரு புள்ளியைப் பெற்ற அல்ஜீரியாவும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.
அடுத்த குழுக்களில் யார் யார் அடுத்த சுற்றுக்கு தெரிவாகப் போது குறித்து இன்றைய போட்டிகள் விடை கூறும் என நம்பலாம்.
இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் ஏப்; குழுவில் பராகுவே மற்றும் நி!சிலாந்து அணிகள் விளையாடுகின்றன.
இந்த போட்டியில் பராகுவே வெற்றிபெற்றால் நடப்புச் சாம்பியன் இத்தாலி அணிக்கு அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சற்று அதிகமாகும்.
இன்று நடைபெறவுள்ள இரண்டாவது நடப்புச் சாம்பியன் இத்தாலி அணியை சிலோவேக்கியா எதிர்தாடுகின்றது.
இந்தப் போட்டியில் அடுத்த போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற நிலையில் இத்தாலி இந்தப் போட்டியில் விளையாடவுள்ளது.
ஆயினும் இந்த பதிவு வெளியிட சற்று முன்னர் சிலோவாக்கியா ஒரு கோலை போட்டு முன்னிலை பெற்றுள்ளது.
இதனால் அடுத்து சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இன்று நள்ளிரவு நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து கெமருன் அணியையும் ஆசிய நாடான ஜப்பான் டென்மார்க் அணியையும் ஏதிர்தாடவுள்ளன.
இந்தப் போட்டியில் ஜப்பான் வெற்றிபெற்றால் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் இரண்டாவது அணி என்ற பெருமையைப் பெற்றுக் கொள்ளும்.கெமருன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளமை குறிப்பிடதக்கது.
பலம் குறைந்த கெமருன் அணியை நெதர்லாந்து இலவாக வெற்றி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜீ குழுவில் பிரேசில் மற்றும் போர்துக்கல் அணிகளும் ஏச் குழுவில் சிலியும் ஐரோப்பிய சாம்பியனாக ஸ்பெய்னும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகமாகக் கொண்டுள்ள நாடுகளாக கருதப்படுகின்றன. ஆயினும் இதற்கு முன்னர் ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெய்னை வீழ்த்திய சுவிட்ஸ்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பும் உள்ளது.
சுவிட்ஸ்லாந்து பலம் குறைந்த கொண்டூராசை இலகுவில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்த்தினால் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்புள்ளது.
இதேபோல் ஸ்பெய்ன் அணி சிலியை அதிக கோல்கள் வித்தியாசத்தில் வீழ்தினால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.
அப்படி நிகழ்ந்தால் 48 வருடங்களின் பின்னர் உலக கிண்ண போட்டிகளில் விளையாடும் சிலி அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாவது கேள்விக்குறியாகிவிடும்.
புல இயற்கை அனர்தங்கள் நடைபெறும் சிலியில் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று குழுவில் முதலாம் இடத்திலுள்ளது.
ஸ்பெய்ன் இரண்டாம் இடத்திலும், சுவிட்ஸ்லாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s