தனுஷின் மயக்கம் என்ன

தனுஷ்  நடிச்சு அண்மையில் வெளிவந்த படம் மயக்கம் என்ன எனக்கும் அண்மையில் அந்த படத்தை பார்க்க சந்தர்ப்பம் கிடைச்சது.

இடைவேளைக்கு முன்னர் ஒரு படம் இடைவேளைக்கு பின்னர் ஒரு படம் பார்த்த மாதிரி இருந்தது.எப்பிடி இருந்தாலும் இடைவேளைக்கு முன்னர் நண்பர்களின் வீண் கலாட்டாவேட படத்தை கொண்டு போயிருக்கிறார் செல்வராகவன் சோனியாவை பிரிஞ்சதாலேயோ என்ன செய்யிறதொண்டு தெரியாம படம் பண்ணிருப்பார் போல தோண்டிச்சு.

மழை பெய்யும் பொழுதில் வீட்டின் குத்துப் பகுதியில் உறக்கி எழும்பும் தனுஷ்  எதிர்காலத்தில் தனது இலட்சியமான சிறந்த புகைப்பட கலைஞன் ஆக மாறுவதை காட்டும் படமே மயக்கம் என்ன

தொடக்கத்திற்கும் முடிவிற்கும் தலைப்பு நிச்சயம் பொருந்தாது இடைநடுவில் நடக்கும் சம்பங்களை அடிப்படையாக கொண்டதே படத்தின் தலைப்பு.

நண்பர்களின் கூட்டு கலாட்டாவோட படத்தை தொடக்கும் செல்வராகவன் பழகிப் பார்த்து திருமணம் செய்யிறதெண்ட விசயத்தை கொண்டு வருகிறார்.
பழகிப் பார்த்து கல்யாணம் பண்ணிறதெல்லாம் இதுவரைக்கும் தமிழ் கலாசாரத்திற்குள் வரல்ல எண்டு நான் நினைக்கிறன்.

நிச்சயமாய் வீட்டில உள்ள பெரியவர்களுக்கு இந்த விசயத்தில சற்றும் கூட உடன்பாடு இருந்திருக்க மாட்டாதெண்டு நான் நினைக்கிறன்.எப்பிடியொண்டாலும் தற்கால இளசுகளுக்கு இந்த விசயம் கொஞசம் சரி அல்லது நன்றாகவே பிடித்திருக்கும்.

கதாநாயகியான ரிச்சாவுடன் பழக்கிப் பார்க்கும் தனுஷின் நண்பன் அவளை கவரக் கூடிய விதத்தில் செயற்படாத மாதிரி கதை சொல்லும் செல்வராகவன் தனுஷின் செய்கையால் கதாநாயகி ஈர்க்கப்படுதாய் படத்தை தொடர்கின்றார்.
தனக்கும் கதாநாயகி ரிச்சா கங்கோபாத்தியாயே மீது சின்ன மயக்கம் இருப்பதை உணர்வுகளால் காண்பிக்கிறார் தனுஷ் .

எனினும் அதனையும் மறைத்து இதெல்லாம் தப்பு நீ எனக்கு சிச்டர் மாதிரி எண்டு வசனம் பேசிறதெல்லாம் ரொம்ப ஒவர் ……

இதனிடையே தனது இலட்சியத்தை அடைய துடிக்கும் தனுஷ் அந்த துறைசார்ந்த நிபுணர் ஒருவரால் ஏமாற்றமடையும் போது ஆறுதல் கூறும் கதாநாயகி ரிச்சா உணர்ச்சி வசப்பட்டு முத்தமிடுகிறார்.

நண்பனுக்கு துரோகம் செய்ததாக துடிக்கும் தனுச் சில நாட்கள் வேறிடம் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது தனுசை; கதாநாயகி ரிச்சா கட்டியணைக்கும் போது நண்பன் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

நுண்பனின் தகப்பனார் கொடுக்கும் தண்ணியப் போட்டு சமாதானமாகும் நண்பர்கள்.தொடர்ந்து கதாநாயகியை ரிச்சாவை திருமணம் செய்கிறார் தனுஷ் .
எனினும் இலட்சியத்தை எட்டத் துடிக்கும் தனுஷ்  பின்னடைவை சந்திக்கறார்.

கதாநாயகியை அடித்து துன்புறுத்துகிறார். பழகிப் பார்கின்ற கலாசாரத்தில்; வந்த பெண்ணு அந்த துன்புறுத்தல்களுக்கு மத்தியில் பொறுமையாய் இருகிறார் என்றால் அது படத்தில் மட்டும் தான் முடியும்.இருப்பினும் தனுசின் இலட்சியத்தை எட்டுவதற்கு மனைவியாக கதாநாயகி ரிச்சா மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டதக்கது.

இதனிடையே ஏமாற்றிய பிரபல புகைப்படப் பட கலைஞரின் நேர்காணலை தொலைக்காட்சியை பார்க்கும் போது கோபமடையும் தனுஷ்  கற்பமாக இருக்கும் மனைவியை தாக்கும் போது கற்பம் கலைகிறது.அதன் பின்னர் அவர் தனுசுடன் பேசுவதற்கு மறுக்கிறார்.

இதனையடைந்து மனந்திருந்தும் தனுசிற்கு மனைவியின் முயற்சியினால் புகைப்பட கலைஞர் என்ற இலட்சியத்தை அடைவதற்கு சந்தர்பம் கிடைக்கிறது.
தனது திறமையால் புகைப்பட கலைஞருக்கான உலகில் சிறந்த விருதை வெல்கிறார் தனுஷ் . புடம் ஆரம்பமானவுடன் எதிர்பார்த்த முடிவுதான்.

விருதுக்கு காரணமான நண்பர்களுக்கு நன்றி சொல்லும் தனுஷ்  விசேடமாக மனைவியான கதாநாயகிக்கு நன்றி சொல்கிறார்.நன்றி சொல்லும் தனுசினை பெருமித்துடன் நோக்கும் கதாநாயகி ரிச்சா நீண்ட நாட்களின் பின்னர் கணவனான தனுசுடன் தொலைபேசியில் உரையாட ஆரம்பித்ததுடன் படம் முடிகிறது.

படத்தின் பாடல்கள் இளைஞர்களை பெரிது கவர்ந்திருக்கும். எனினும் பெரியவர்களிடம் இருந்து அதற்கு நிச்சயம் பாராட்டு கிடைத்திருக்காது என்பது உறுதி.பாடல்களில் சில இடங்களில் இரட்டை அர்த்தம் புகுத்தப்பட்டுள்ளதை உணர முடிகிறது.

ஒரே வசனத்தில் சொன்னால் இடைவேளைக்கு முன்னர் ஒண்ணுமே இல்ல இடைவேளைக்கு பின்னர் சுமார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s