என் பார்வையில் தெய்வதிருமகன்

தற்செயலாக பல்கலைகழக மாணவர்களிடம் மாட்டிக் கொண்டதில்
தெய்வதிருமகன் ரிக்கெட்டை வாங்கவேண்டியதாக போச்சு. சரியெண்டு நேற்று இரவு 10 மணிக்கு கொங்கோட் திறேட்டரக்கு போனேன்.எல்லாமே பொடியல் தரவழி. 10 மணிக்கு படம் போடேல்லே எண்டு சில பொடியல் பச்ச செந்தமிழில் வைய ஆரம்பிஞ்சிட்டாங்க.
சுமார் 10.15 போல படத்தை போட்டாங்கய்யா. சியான்ட படமெண்டதால ஆவலோட எதிர்பார்த்தேன்.

நகரத்தில் தொடங்கும் கதை கிராமத்தை நோக்கி நகருது.அபியும் நானும் மாதிரி அப்பா மகள் பாசத்தை சொல்லும் மற்றுமொரு படம் மனவளர்ச்சி குன்றிய கதாபத்திரத்தில் வரும் விக்ரம் படம் முழுவதும் தொடர்கின்றது. ஆனாலும் அந்த கதாபத்திரத்திற்கு மனைவியொன்றை உருவாக்கிய இயக்குநர் பிள்ளையொன்று பிறப்பதாகவும் அதன் பின் மனைவி இறப்பதாகவும் கதையை கொண்டு செல்கிறார்.

பிள்ளை பாத்திரமாக வரும் குழந்தை பாத்திரத்தின் நடிப்பு பிரமாதம்.ஒரு சபாஷ் போடலாம்.மற்றப் படங்களைபோல் சியானையும் காதலித்து மணக்கும் பெண்ணின் தகப்பனார் பேரப்பிள்ளைக்கு உரிமை கொண்டாடி சியானிடம் இருந்து பிள்ளையை பிரித்துச் செல்கிறார்.பிள்ளைத் தேடி நகரத்துக்குச் செல்லும் சியான் சட்டத்தரணி கதாபாத்திரத்தில் வரும் அனுஷ்காவை சந்திக்கிறார்.

பிள்ளையை சியானும் ஒன்றுசேர்க்கும் அனுஷ்காவின் முயற்சி தோல்வியடைகிறது. இருப்பினும் எதிர்தரப்பு சட்டத்தரணியாக வரும் நாசர் இடையில் நடைபெறும் சம்பவங்களால் இறுதியில் மனம்மாறி சியானுடன் பிள்ளை இருக்க சம்மதம் தெரிவிக்கிறார்.இருப்பினும் நீதிமன்றத்தில் நாசர் தொடுக்கும் கேள்விகளால் மனம்மாற்றமடையும் விக்ரம் மனைவியின் தகப்பனிடம் பிள்ளையை கொண்டு சேர்க்கிறார்.

தெய்வதிருமகன் என்ற தலைப்பை படம் முழுவதும் ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயம் ரசிகர்களுக்கு உண்டு. எனினும் படத்தின் இறுதி முடிவு சியான் ஒரு மனவளர்ச்சி குன்றிய பாத்தரமல்ல என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.அந்த இடத்தில் இயக்குநரும் தடுமாறிய நிலையை காணமுடிகிறது.மாதவன் சூர்யா ஆகியோருடன் நடித்த அனுஷக்காவை இந்தப் படத்தில் காணமுடியவில்லை.அங்கு இங்கு வரும் இரட்டை அர்த்த வசனங்களை தவிர 95  வீத சுத்த சைவப் படம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s