சீனாவின் இரகசிய இராணுவ விஸ்தரிப்பும் அமெரிக்காவின் பீதியும்…..

சீனா தனது இராணுவ விஸ்தரிப்புக்களை இரகசியமாக மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீனா தனது இராணுவ வளர்ச்சிகளை மூடி மறைப்பது புரிந்துணர்வின்மை மற்றும் தவறான கணிப்புக்கள் ஏற்படுவதை அதிகரிக்குமென அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில தள ஏவுகணைகளை தரமுயர்த்;துவதுடன், நீர் மூழ்கி படை மற்றும் ஆயுத உற்பத்தி சாலை என்பற்றினை விஸ்தரித்து வருவதாக பெண்டகனின் வருடாந்த அறிக்கையை ஆதாரம் காட்டி அமெரிக்க காங்கிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் தாய்வான் மீதான மேலாதிக்கத்தையும் சீனா அதிகரித்து வருவதாக தெரவிக்கப்படுகின்றது.

சீனாவின் மிக வேகமான வளர்ச்சி தொடர்பாக அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.1,150 குறிந்தூர ஏவுகணை மற்றும் எண்ணிக்கை தெரியாத மத்திய தூர ஏவுகணைகளை விஸ்திரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களின் புல பில்லியன் டொலர்கள் இராணுவ விஸ்தரிப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.வரையறுக்கப்பட்ட நிலையில் இருந்த சீனாவின் இராணுவம் மற்றும் பாதுகாப்பு நலன்கள் நீடீரென அதன் சக்தியை அதிகரித்துள்ளமை தவறான எண்ணங்களையும் தவறான கணிப்புக்களையும் உருவாக்குமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் கொரிய மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பாரிய பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டமையே தமது இராணுவ விஸ்தரிப்புக்கு காரணமென சீனாவின் இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமது உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற முறையில் தலையீடுவதாகவும் குறிப்பாக தென் சீன கடற்பகுதி தொடர்பான அமெரிக்கா இவ்வாறு நடந்து கொள்வதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

அண்மையில் வியட்நாமில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டில் சீனாவுக்கு சொந்தமற்ற கடற்பரப்பு உரிமையாளர்கள் குறித்து ஆதரவு வழங்குவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹில்லரி கிளின்டன் தெரிவித்திருந்தார்.

அத்துடன் வியட்னாமுடன் இணைந்து ஒருவார இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது. அமெரிக்க மற்றும் சீன நாடுகளின் இராணுவங்களுக்கு இடையில் தொடர்புகளை பேணுவதை சீனா இடைநிறுத்தியதுடன் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ரொபேட் கேட்சை சந்திப்பதையும் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் சீனா பாதுகாப்பு செலவீனத்தை தனது வரவு செலவு திட்டத்தில் 7 தசம் 5 வீதத்தால் உயர்த்தியிருந்தது.

இது 77 தசம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.அமெரிக்காவின் வருட பாதுகாப்பு செலவீனம் 700 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இந்த சர்ச்சைகளுக்கு இடையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவும் தவறான கணிப்புக்களை தவிர்க்க பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆசியாவில் மிகவும் பலம்பொருந்திய இராணுவத்தினை சீனா கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a comment