ஈராக் தலைநகரிலுள்ள இராணுவ ஆட்சேர்ப்பு நிலையத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதல்…

 ஈராக்கின் தலைநகர பாக்தாத்திலுள்ள இராணுவ ஆட்சேர்ப்பு நிலையத்தில் நடத்தப்பட்;ட தறகொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக ஈராக் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆமெரிக்க படையினரின் படைநடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் நிறைவடையுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கூட்டிணைந்த அராங்கத்தினை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டு ஒருநாள் கழிந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈராக்கில் இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக கடந்த யூலை மாதம் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்தமை குறிப்பிடதக்கது.
ஏற்கனவே ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் படையினர் மற்றும் வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் மீது நாளாhந்தம் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றமை வழமையாகியுள்ளது.

இந்த மாகாணத்தில் ஆகஸ்ட் மாதத்தின் முதலிரண்டு வாரங்களில் மாத்திரம் தாக்குதல்கள் காரணமாக 30 பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடதக்கது.

இராணுவத்தில் சேர்வதற்கான நீண்ட வரிசையின் நின்ற பொதுமக்கள் மீதே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈராக்கில் வேலைவாய்பற்றோரின் தொகை அதிகரித்து வருகின்றது.
மக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் நகரின் பிரதான பஸ்திரிப்பிடத்துக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோராத நிலையில் ஈராக்கில் இயங்கும்  அல் கைய்தா அமைப்பு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
ஈராக்கில் வாரந்தம் 250 பேர் இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர்.

இதன் மூலம் ஆயுத ஏந்திய இராணுவத்தினர் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மாதத்தின் இறுதியில் ஈராக்கில் தங்கியுள்ள அமெரிக்க படையினரின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக அமெரிக்கா குறைக்கவுள்ளதுடன் 2011 ஆண்டின் இறுதியில் முழு துருப்பினரையும் வாபஸ் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.
இவ்வாறு புதிதாக இணைக்கப்படும் படையினருக்கு பயிற்சிகளை வழங்க அடுத்த வருடம் வரை ஈராக்கில் அமெரிக்க படையினர் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s