இலங்கையில் அருள் தரும் கண்ணகை அம்மன் ஆலயங்களின் வரலாறு

“உலக புகழ் கற்பரசி ஊர்காக்கும் காவல் தெய்வம் சிலம்புடைத்து வழக்கு வென்று சினம் தணித்த சிலம்புச் செல்வி சலம் நிறைந்த ஆற்றோரம் நாகம் சேர கல்லடிமுனையில் நாச்சியாகி வலம் வந்தால் வரம் தருவாள் வைகாசித் திங்களிலே குளிர்த்தி பாடி குலம் விளங்கத் தாயாக்கி குழந்தை தந்தாள் வட்டுக்குத்த நலம் தருவாள் பாளையொரு பத்திரம் மஞ்சள் சேர்த்தால் நிலம் விளையும் கலைபெருகும் நவநிதியும் வளம் கொழிக்கும் நலமோங்கும் துறைநீலாவணையுர் கண்ணகைத் தாயே”

என்றும் இந்துப் பெருமக்களால் வழிபடும் தலச் சிறப்பும் தொன்மையும் மிக்க ஆலயமாகத் திகழ்வது துறைநீலாவணை பதியில் அமைந்திருந்து அருளாச்சி புரியும் கண்ணகை அம்மன் ஆலயமாகும்.ஆற்றல்கள் அனைத்தும் அருளி அண்ட சராசரங்களில் அன்னையின் வடிவில் நீக்க மற நிறைந்து அருள்பாலிப்பவள் அன்னை பராசக்தியாகும்.

புங்கமர நிழலில் நாகம் குடைபிடிக்க மங்கை வடிவாகி குன்றின் மேல் அமர்ந்து குறைகளைப் போக்கி மக்களைக் காக்கும் காவிய நாயகி துறைநீலாவணை கண்ணகை அம்மனின் டிந்த ஆண்டுக்கான உற்சவப் பெருவிழா கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகி ஜுன் முதலாம் திகதி திருக்குளிர்த்தி பாடும் வைபவத்துடன் இனிதான நிறைவுபெற்றது என்றும் பரிப+ரணி மகாசக்தி கங்கைகரையில் அமர்ந்திருந்து அருள்சுரக்கும் அற்புத சக்தியான கண்ணகை அம்மனின் சிறப்பு ஏனைய ஆலயங்களில் இருந்து வேறுபட்டதாக உள்ளது.

மட்டக்களப்பு தமிழகத்தில் சீரும் சிறப்புடனும் கல்வெட்டு மற்றும் செப்பேடுகள் உடனான கண்ணகை அம்மன் ஆலயமாக துறைநீலாவணைக் கிராமத்தின் வட அந்தத்தில் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் குன்றுகளின் மேல் அமையப் பெற்ற ஆலயமாகவுள்ளதால் இந்த ஆலயத்தை கல்லடிநாச்சியம்மன் என அழைப்பர்.

மட்டக்களப்பு வாவியை நோக்கியவாறு குன்றுகள் அனைத்தையும் தன்னகத்தே அடக்கியவாறும் சோதிட விதிப்படியும் இயற்கை அமைப்புடனும் காட்சி தருகின்ற புண்ணிய தலமாக இந்த ஆலயம் உள்ளது

இந்த ஆலயம் அமைந்துள்ள இந்தப் பிரதேசம் பண்டைக்காலத்தில் காடுகள் அடர்ந்த பிரதேசமாக விளங்கியது.இந்தப் பகுதியில் முனிவர்கள் வாழ்ந்தமையினால் இந்த ஊரின் ப+ர்வீகக்குடிகள்இந்த இடத்துக்குச் செல்ல அச்சமும் பக்தியும் உள்ளவர்களாக இருந்தார்கள் என வரலாறுகள் கூறுகின்றன.

சில காலத்தின் பின்னர் முனிவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்று சென்றதை அறிந்த மக்கள் அந்த இடத்துக்குச் செல்லத் தலைப்பட்டனர்.

இவ்வாறு சென்ற பக்தர் ஒருவர் ஒரு அதிசயத்தைக் கண்டார்.முனிவர்கள் வசித்த அந்த ஆச்சிரமம் பாழடைந்து இருந்தததையும் அதற்குப் பக்கத்திலே ஒரு புங்க மர நிழலில் சித்திர வேலைப் பாடுகளுடன் சிலம்பு கொண்ட ஒரு சிலையுமாக மூன்று சிலைகளையும் கண்ட அவர் அண்ணாந்து பார்த்தவுடன் படம் பிடித்த கோலத்துடன் உயர்சாதி நாக பாம்பு குடை பிடித்திருப்பதையும் கண்டார்.

அடுத்த பதிவில் அம்மன் அருள் தொடரும்…..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s