புலமைச் சொத்துரிமைச் சட்டமும் இன்றைய தனியார் இலத்திரனியல் ஊடகங்களும்

தொலைகாட்சியில் விளையாட்டுச்செய்தி

தொலைகாட்சியில் விளையாட்டுச்செய்தி

சற்று நாட்களுக்கு முன்பு எங்கள் தனியார்

வானொலியில் விளையாட்டுச்செய்தி

வானொலியில் விளையாட்டுச்செய்தி

வானொலிகளில் ஒரு சுவார்சியமான சம்பவம் அல்லது இளசுகளின் மனதைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி நடந்தேறியது.அது புதிய விடயம் அல்ல சீசனுக்கு சீசன் நடக்கும் நிகழ்வு தான்.அண்மையில் தென்னாபிரிக்காவில் நடந்து முடிந்த  ஐசிசி சம்பியன்ஸ் சிப் போட்டிகள் பற்றியது தான் அந்த நிகழ்வு.

போட்டிகளின் போது நீங்கள் இது போன்ற  ரெயிலர்களை (நிகழ்சி முன்னோட்டம்)அதிகம் கேட்டிருக்கலாம்.”உங்கள் வானொலியில் தென்னாபிரிக்காவில் இடம் பெறும் ஐசிசி சம்பியன் சிப் போட்டிகளின் ஸ்கோர் விபரங்களை உடனுக்குடன் கேட்கலாம்”. இப்படியான வாசகங்கள் வானொலியில் ஒலிக்கக் கேட்டிருக்கலாம். என்னடா இவன் புலமைச் சொத்துரிமை பற்றி தலைப்பு இட்டு விட்டு ஐசிசி ஸகோர் விபரம் பற்றி சொல்லுகிறான் என்று கோபப்பட வேண்டாம்.

இருங்கள் விஷயத்திற்கு வருகிறேன் இங்கே தான் தொடங்குகிறது பிரச்சனை.அண்மையில் இலங்கை அணியின் முன்னை நாள் டெஸ்ட் அணித் தலைவரும்  தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினருமான ஹசான் திலகரட்ண ஐசிசி சம்பியன்ஸ் சிப் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமம் வழங்கப்பட்டதில் மோசடிகள் இடம் பெற்றதாக தெரிவித்திருந்தார்.இது ஆழமாக புலனாய்வு செய்ய வேண்டிய செய்தியாகும்.இது வாசகர்களாகிய உங்களுக்கு மேலதிக தகவல்.

ஆனாலும் அண்மைய உலகக்கிண்ணப் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமம் அரச தொலைக்காட்சிக்கும் வழங்கப்பட்டதை நீங்கள் அறிவீர்களா?ஆனாலும் இந்தப் போட்டிகளின் ஸ்கோர் விபரங்கள் உடனுக்குடன் எங்கள் தமிழ் தனியார் வானொலிகள் வழங்கியிருந்தன.அரச வானொலிகளில் ஸ்கோர் விபரங்களைக் கேட்டதை விட தனியார் வானொலிகளில் கேட்டவர்கள் தான் அதிகம்.

இது இலங்கை மற்றும் உலக ரீதியான புலமைச்  சொத்துரிமைச் சட்டத்திற்கு முரணாணதாகும்.இந்தச் சட்டங்கள் இலங்கை அரசியல் யாப்பில் குறுப்பிடப்பட்டுள்ள போதும் அதனை ஒழுங்காக நடைமுறைப் படுத்துவதில் பல பின்டைவுகள் காணப்படுகின்றன.ஒரு உரிமையுடைய பணம் கொடுத்து உரிமம் பெற்று ஒளி,ஒலி பரப்புவது தவறல்ல மாறாக உரியவர்களின் அனுமதியின்றி  இவ்வாறு தனியார் வானொலிகள் விளையாட்டு விபரங்களை  இவ்வாறு ஒளிபரப்பச் செய்வது தண்டனைக்குரிய குற்றமென்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு தொலைக்காட்சிச் செய்தியைப் பொறுத்த வரை ஒரு போட்டியின் காட்சிகளை 30 வினாடிகள் மாத்திரம் செய்திகளுக்காக ஒளிபரப்புச் செய்யலாம். இதன் காட்சிகளை உரியவர்களின் அனுமதியின்று வேறெந்த நிகழ்சிகளில் ஒளி,ஒலி பரப்ப முடியாது.

அண்மையில் இந்த சட்டத்தின் அடிப்படையில் உலக முதல் நிலைப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்சைக் கூட விட்டு வைக்கவில்லை.அமரிக்காவைச் சேர்ந்த மென்பொருள் தயாரிக்கும் ஒரு நிறுவனம் மைக்கிறோசொப்ற் ஓப்பீசில்  வேட் என்னும் மென்பொருள் தமது தயாரிப்பை ஒத்ததாக இருப்பதாகவும் அதனை தமது நிறுவனத்தின் அனுமதியின்றி உபயோகித்திருப்பதாக வழக்கு தாக்கல் செய்திருந்தது.இதன் காரணமாக அமரிக்க நீதிமன்றம் வேட்(Word) மென்பொருளை அமரிக்காவில் பயன்படுத்த இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

இந்த புலமைச் சொத்துரிமை பற்றிய எண்ணப்பாடுகள் ஜேர்மனியின் குட்டன்பேர்க் அச்சுயெந்திரத்தை கண்டறிந்த பின்பு வளர்ச்சி பெற்றது.அதன் பின்பு வில்லியம் கெக்ஸ்ரன்டனால் இந்த அச்சு எந்திரத் தொழில்நுட்பத்தினை ஐரோப்பா முழுவதும் பரவ நடவடிக்கை எடுத்தமையாகும். புலமைச் சொத்துரிமை பற்றிய சட்டங்கள் பிரித்தானியப் பாரளுமன்றத்தால் 1710 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ம் திகதி சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது.இது ஆன் அரசியின் யாப்பு என அழைக்கப்படுகிறது.

இந்த யாப்பின் பெறுபேறாக படைப்பென்றை வெளியிடும் உரிமையை அதனை உருவாக்கியவரிடமுருந்து குறிப்பிட்ட கொடுப்பனவு ஒன்றைச் செய்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாக்கியவருக்கு ஏற்பட்டது. இந்த விதமாக 14 ஆண்டுகள் வீதம் இருமுறை வெளியீட்டு உரிமை ஒப்படைக்கப்பட்டதன் பின்பு உருவாக்கியவரின் உரிமை செல்லுபடியற்றதாகிவிடும்.இதன்படி உருவாக்கியவரின் உரிமைக்காலம் 28 வருடங்களாகும்.

ஆன்(Ann) யாப்பின்  சட்ட ரீதியான சுருக்கம்

01.வெளியீட்டு உரிமையானது ஒரு சொத்துரிமையாவதுடன் ஒரு விஷேட படைப்புடன் சம்மந்தப்பட்டதாகும்.

02.வெளியீட்டு உரிமையுடையவருக்கு அப் படைப்பை பிரதி பண்ணுவதற்கும் ஒலிபரப்பு அல்லது சந்தைப்படுத்தல் செய்வதற்கும் சட்ட ரீதியான உரிமையுண்டு.

03.வெளியீட்டு உரிமையுடையவருக்கு அடிப்டடை பின்தயாரிப்பு மீள்தயாரிப்பு அல்லது பொருளாதார நோக்கங்களைக் கட்டுப்படுத்தல் தொடர்பாக சட்ட ரீதியான உரிமையுண்டு.

04.அவ்வாறே அப் படைப்பு பொருளாதார இலாபம் கருதி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ குறிப்பிட்ட காலப் பகுதிக்கு உரிமையை மாற்றுவதற்கு படைப்பாளிக்கு சட்ட ரீதியான உரிமையுண்டு.

05.ஒரு வேற்றுச் சாரார் ஒரு படைப்பின்  வெளியீட்டு உரிமையுடையவரின் சட்டரீதியான அனுமதியின்றி பாவித்துப் பொருளாதாரப் பயன்களைப் பெற்றுக் கொள்வாராயின்  அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு படைப்பாளிக்கு உரிமையுண்டு.

06.ஆரம்பப் படைப்பின் படைப்பாளி அதன் வெளியீட்டு உரிமையை ஆரம்பத்திலே பெறுபவர் ஆள் யாப்பின் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட எல்லா நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு இலங்கையும் அதனை ஏற்றுக் கொள்கிறது.

இங்கிலாந்தின் 1911 இன் வெளியீட்டு உரிமைச் சட்ட ஏற்பாடுகள் முதல்முதலில் இலங்கையிலும் வெளியீட்டு உரிமைச்சட்டமாக விதிக்கப்பட்டது.1947 இல் சுதந்திரச் சட்டம் விதிக்கப்பட்ட போது வெளியீட்டு உரிமைச் சட்ட ஏற்பாடுகளும் அதில் உள்ளடக்கப்பட்டன.

1979 இலக்கம் 52 இன் அறிவுப் புலமைச் சொத்துக்கள் சட்டம் அறிமுகப்படுத்தலுடன் வெளியீட்டு உரிமம் பற்றி சட்டமும் அதில் உள்ளடக்கப்பட்டது.அதன் படி வெளியீட்டு உரிமை என்பது புலமைசார் சொத்தாக கருத்தில் கொள்ளப்பட்டது.பின்னர் இந்த சட்டம் சில திருத்தங்களுக்குட்பட்டதோடு இப்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவது 2003 இலக்கம் 36 புலமைச் சொத்துரிமைச் சட்டதின் அடிப்படையிலாகும்.

இந்தக் கட்டுரை யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல பிரச்சனைகள் பின்னாடி வரும் என்று தெரிந்தால் அதெற்கு ஏற்றபடி நடக்க வழிவகுக்கும்.வெள்ளம் வருமுன் அணைகட்டுவது பொருத்தமானது அல்லவா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s