யாழ்தேவியுன் மனிக்பாம் நோக்கிய என் பயணத்தின் தொடர்ச்சி….மனிதாபிமானம் பெரிதா?240 கிலோமீற்றர் தூரம் பெரிதா?

இவ்வாறு ஒருவாறு கிளம்பிய யாழ்தேவி புகையிரதம் மருதானையை தாண்டிக்கொண்டு சென்று கொண்டிருந்து.அடி பிடிப்பட்டு ஏறியவர்கள் சீற் இருக்கும் இடத்தை நோக்கி தேடல்களுடன் அங்கும் இங்கும் நடைபயின்ற வண்ணம் இருந்தனர் வயது வேறுபாடு இன்றி.என் உள்மனது சொன்னது ஐயோ பாவம் ஆனாலும் ஏற்கனவே ஒரு சீற் பிடித்து கொடுத்தேன் பிறகு நான் எழும்பி மற்றவருக்கு இடம் கொடுப்பதற்கு என்மனம் இடம் தரவில்லை.

இப்படி நேரம் சென்று கொண்டிருக்கும் போது ஒரு தமிழ் வயோதிபப் பெண் பயணிகள் செல்லும் பாதையில் உட்கார்து விட்டார்.இதனால் பயணிகள் அவரை கடந்து செல்ல முடியாமல் இருந்து. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு சிங்கள ஆண் உங்களுயை ஆட்கள் தானே எழும்பி இடம் விடலாம் தானே என்று ஓர் அதிகாரத் தோரணையில் கூறினார்.ஆனாலும் அங்கிருந்தவர்கள் அதற்கு செவிசாய்ப்பதாக இல்லை நானும் கூடத்தான். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் அவர் பேசியது என்வென்று பலருக்கு விளங்கவில்லை விளங்கியவர்கள் மௌனமாக இருந்தார்கள் கொழும்பில் இருந்து வவுனியா வரையுள்ள 240 கிலோமீற்றர் தூரத்தை நினைத்து.மனிதாபிமானத்தை 240 கிலோமீற்றர் தூரம் வென்றுவிட்டது.

மனிதாபிமானத்தின் இலங்கையைப் பொறுத்த வரை இவ்வளவு தான் என்று என் ரயில் பயணம் எனக்கு உணர்த்தியது.அந்த ஒரு கணம் பெற்ற உணர்வில் அந்த அம்மாவுக்கு இடம் கொடுக்க நினைத்த போது அருகில்  இருந்த பேசிய சிங்கள நண்பர் எழும்பி இடம் கொடுத்தார். அவர் அன்று தான் கொழும்பில் இருந்து மதவாச்சி முதன் முதலில் பயணம் செய்கிறார் என்பதை அவருடம் பேசிய போது அறிந்து கொண்டேன்.இதற்கு நடுவில் அவரின் முகத்தை பார்த்த போது விருப்பமில்லாமல் இடம் கொடுத்தததை அவர் முகம் காட்டியது. இவ்வாறு யாழ்தேவி  குருநாகலைக் கடந்தது ஏறத்தாழ 2 மணித்தியாலம் சென்றது.நான் சிறிது நேரம் உறங்கியிருந்தேன்.நான் சீற்ரில் இருந்து உறங்கினேன்.ஆனால் பலர் சீற்றில் சாய்ந்த வண்ணம் நின்றவாறு தூயில் கொண்டிருந்தனர்.

சரி என்று அங்கிருந்த ஓரு ஆண் மகனுக்கு இடம் கொடுத்து நான் எழும்பி நின்றேன்.முன்பு அந்த பெண்ணுக்கு இடம் கொடுத்தவருடன் சிறிது நேரம் உரையாடிய போது அவர் என்னிடம் ஏன் இவ்வளவு சனம் என்று வினாவினார்.அதற்கு நான் தற்போது A9  பாதை திறந்திருப்பது பற்றியும் ரயில் தாண்டிக்கும் வரை செல்வது பற்றியும் சொன்னேன்.அதற்கு அவர் சொன்ன பதில் கன்னத்தில் எனக்கு அறைந்து போல் இருந்து.அவர் சொன்னார் “ரயில் தாண்டிக்குளம் வரை செல்லும் போதே இவர்கள் இப்படி இருக்கிறார்கள் ரயில் யாழ்பாணம் வரை போனால் அவ்வளவு தான் “இதிலிருந்து அவர் அந்தப் பெண்மணிக்கு விருப்பத்தோடு இடம் கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன்.

அத்துடன் அவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விட்டார் பின்பு அவர் அந்த இடத்துக்கு வரவே இல்லை.எனக்கு அருகில் இரு ராணுவத்தை சேர்ந்தவர்களும் நின்றிருந்தார்கள்.அவர்கள் தங்கள் தூக்கத்தைப் போக்குவதற்காக சிங்கள மொழிப்பாடல்களை பாடியவண்ணம் இருந்தார்கள்.சரி எனக்கும் தூக்கம் வருவது போல் இருந்தது அதனால் அவர்களுடன்  சேர்ந்து ரயிலின் ஒரு பக்க யன்னல்களில் போடும் தாளத்தில் எமது கைவரிசையைக் காட்டிணோம்.ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர்களிடமிருந்து சில எதிர்ப்புக்கள் மெதுவாக வந்தது தமிழ் மொழியில்.

நான் முதலில் ஒரு நகைச்சுவை நிகழ்வைப் பற்றி சொல்ல மறந்து விட்டேன்.நான் எழும்பி இடம் கொடுத்தவுடன் அருகில் நின்ற தமிழ் பெண்மணி எனக்கு இடம் தந்திருக்கலாம் தானே?என வினாவினார். பெண்களுக்கு இடம் கொடுத்தால் நான் வவுனியா வரை நின்று கொண்டு தான் போக வேண்டும் என நான் சொன்னேன்.அதற்கு ஆதரவாக சில தமிழர்களின் ஆமோதிப்புடன் சிரிப்பொலி வந்தது.இதற்கு ஆதரவாக அங்கு ஓர் பெண்ணும் இதே போன்று ஒர் இடத்தில் ஒரு அண்ணா இடம் கொடுக்க இறுதிவரை அந்த இடத்தை விட்டு அந்தப்பெண் எழும்பவே இல்லை.

அனுபவம் தொடரும்…………..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s