நடப்புச் சம்பியன் நடக்கிறது 2009 இல் புதிய சம்பியனாய்……….

75178.iconநெறகிரிக்கெட்டின் தாயகம்   இங்கிலாந்தாக 109136.iconewஇருந்தாலும் 2009 ம்ஆண்டு தென்னாபிரிக்காவில் இடம்பெற்று முடிந்த ஐசியின் மினி உலககிண்ண அரையிறுதியில் அவுஸ்ரேலிய அணிஇங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.நேற்று இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து நடப்புச் சம்பியன் பட்டத்தை மீண்டும் தனதாக்கியது.  அன்றைய டொன் பிரட்மன் ,அதைத் தொடர்ந்து ஸ்ரிவோ, இன்று 30  வயதைக்  கடந்தாலும் சிறந்த தலைமைத்துவத்துடன் அணியை வழிநடத்துகிறார் றிக்கி. கடந்த 2007 ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணியை வென்று அவுஸ்ரேலியா மூன்றாவது முறையாக உலக கிண்ணத்தை தனதாக்கியது.

அன்று றிக்கியின் தலைமையில் ஒரு அசைக்க முடியாத அணியாக இருந்தது.அன்று விளையாடியவர்களில் றிக்கி,லீ ஆகிய இருவர் மட்டுமே நேற்றைய போட்டிஅணியில் விளையாடுயிருந்தனர். 2007ம் ஆண்டு கில்கிறிஸ்ட், ஹெடன், சிமன்ஸ்,கிளாக்,மக்கிராத் போன்ற சிறந்த விரர்கள் விளையாடியிருந்தனா். இன்றைய அவிஸ்ரேலியா அணியல் கிளாக்,சிமன்ஸ் தவிர கில்கிறிஸ்ட்,ஹெடன்,மக்கிராத் போன்றோர் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.இருந்தும் இளைய விரர்களான பெஃன், சிடில், கொறிக்ஸ்,ஜோன்சன் போன்ற இளைய விரர்களின் கூட்டணியில் 2009ற்கான ஐசிசி மினி உலகக் கிண்ணத்தை அவுஸ்ரேலியா வென்றெடுத்துள்ளது.

கில்கிறிஸ்ட் அளவுக்கு இல்லாவிட்டாலும் பெஃன் விக்கெட் காப்பாளராகவும் ,துடுப்பாட்ட விரராகவும் தனது பணியைச் சிறப்பாக செய்கிறார். கொறிக்ஸ் நேற்றைய போட்டியில் சிறப்பாக செயற்பட்டு 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை விழ்த்தினார். ரெட்மண்ட், கப்ரில் போன்ற  முக்கியமான நியூசிலாந்து விக்கெட்டுக்களை விழ்த்தியிருந்தார்.மற்றுமொரு வீரர் சிடில் இம் முறை ஐசிசிக்கான வளர்ந்து வரும் விளையாட்டு விரருக்கான விருதை வென்றிருந்தார். இவரும் 30 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை விழ்த்தியிருந்தார்.பந்து வீச்சில் இவர்களின் பங்களிப்போடு நியூசிலாந்தை 200 ஓட்டங்களுக்கு அவுஸ்ரேலியா கட்டுப்படுத்தியது.

நியூசுலாந்து அணி சார்பாக கப்டில் ஆகக் கூடிய ஓட்டமாக 40 ஓட்டங்களை எடுத்தார்.94 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது இருப்பினும் 6 வது விக்கெட்டுக்காக இணைந்த புறூம் மற்றும் பிஃராங்கிலின் ஜோடி தமக்கிடையே 65 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.இதில் பிராங்கின் 33 ஓட்டங்களையும் புறூம் 37 ஓட்டங்கயையும் பெற்றனர்.

இதுவே சம்பியன்ஸ் சிப் போட்டிகளில் 6வது விக்கெட்டுக்கான அதி கூடிய இணைபாட்டமாகும்.தொடர்ந்து 201 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இருப்பினும் 2009ம் ஆண்டு ஐசிசி போட்டியின் 3 வது விக்கெட்டுக்கான அதிகூடிய இணைப்பாட்டத்துடன் அவுஸ்ரேலியா  அணி 6 விக்கெட்டுக்களால் நியூசிலாந்தைத் தோற்கடித்து உலக சம்பியன் என்பதை மீண்டும் நிலை நிறுத்தியது. 3 வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த வொட்சன் மற்றும் வைட் ஜோடி தமக்கிடையே 128 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியினை உறுதி செய்தனர்.

இதில் வொட்சன் இந்த போட்டிகளின் தனது 2 வது சதத்தை பெற்றார்.இவர் ஆட்டமிழக்காமல் 10 நான்கு ஓட்டங்கள் நான்கு ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 105 ஓட்டங்களைப் பெற்றார். இவருடன் இணைந்து ஆடிய வைட் 7 நான்கு ஓட்டங்கள் , ஒரு ஆறு , ஓட்டங்கள் அடங்கலாக 62 ஓட்டங்களைப் பெற்றார்.45.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.இதில் சதம் பெற்ற வொட்சன்ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த இந்த போட்டிகளில் தொடர் ஆட்டநாயகனாக றிக்கி பொண்டிங் தெரிவானார்.1996 ஆம் ஆண்டு இறுதியாக இறுதிப் போட்டியில் இலங்கையுன் தோற்ற பின்பு இன்று வரை  இறுதிப் போட்டிக்கு தெரிவாகி ஒரு இறுதிப் போட்டியில் தோற்காத ஒரே அணியாக அவுஸ்ரேலியா திகழ்கின்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s