தாண்டிக்குளம் வரை யாழ்தேவியும்…. வவுனியாவிலிருந்து மனிக்பாம் வரை பஸ்சில் நானும்…….

imagesஎன் ரயில் பயணங்கள் மற்றும் பஸ் பயணங்கள்images1 எனது எட்டாம் வகுப்பில் ஆரம்பித்தது. இந்த பயணங்கள் மூலம் பல விதமான அனுபங்களை கண்டிருக்கிறேன்.அதில் காதல் , துக்கம், பாசம், கோபம், நட்பு,என பல வேறுபட்ட விதங்களில் அவை என் வாழ்வுக்கும் புடம் images2போட்டன.கடந்த கால வன்னிப் போருக்குள் அகப்பட்ட மக்களுக்குள் என் குடும்பமும் அடங்கும்.

பல உடன் பிறப்புக்களை இழந்து தவிக்கும் மக்கள் இன்று இடைத்தங்கல் முகாம்களில் அடைபட்டு இருக்கிறார்கள். அவர்களின் உணர்வலைகள் என் கண்களுக்கும் அகப்பட்டு நிற்கின்றன.அவற்றை விடுதலை செய்ய முயற்சிக்கிறேன் முடியாமல் இருக்கின்றன.அதனால் தான் அவற்றை மட்டுமல்ல கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது பெற்றோரைப் பார்க்க வவுனியா நலன்புரி முகாமுக்கு, வவுனியா வரை ரயிலிலும் வவுனியாவிலிருந்து முகாம் வரை பஸ்சில் பயணம் செய்தேன்.

இந்தப் பயணத்தில் நான் பெற்ற அனுபவம் இந்த கட்டுரையுடாக வெளிப்படுத்த முனைகிறேன்.அன்று கல்லூரி முடிந்து வவுனியாவிற்கு செல்வதற்காக அவசரமாக வீட்டுக்கு சென்று எனக்கு தேவையான பயண ஆயத்தங்களைச் செய்து கொண்டும் அப்பா ,அம்மாவுக்கு தேவையான சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு சென்றேன்.

ரிக்கெட் வாங்குமிடத்தில் ஏதாவது சீற் புக்கிங் இருக்கிறதா ? என்று விசாரித்த போது 3ம் வகுப்பு மாத்திரம் தான் இருப்பதாக பதில் கிடைத்தது. எப்படித்தான் சீற் பிடிக்கிறது என்ற ஏக்கத்துடன் ரிக்கெட்டை காட்டி விட்டு வவுனியா ரயில் வரும் 3ம் மேடைக்கு சென்ற போது எனது ஏக்கம் மேலும் அதிகமானது.பெரிய பெரிய பைகளுடன் மேடைகளின் இரு பக்கங்களிலும் வயது வித்தியாசம் இல்லாமல் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

அதிலும் குறிப்பாக இளம் வயதுப் பெடியங்கள் முண்டியடித்துக் கொண்டு நின்றார்கள் ரயில் வரும் தண்டவாளத்தைப் பார்த்தவாறு.நானும் ஒருவாறு முன்னுக்குச் சென்று சீற் பிடிக்க ஆயத்தமானேன்.பார்த்துக்கொண்டிருக்கும்  போது ஒரு ரயிலின் வெளிச்சம் தூரத்தில் தெரிந்தது உடனே பலர் சீற் பிடிக்க ஆயத்தமானார்கள்.பின்பு பார்த்தால்  அந்த ரயில் பக்கத்து பிளற்போமுக்கு சென்றது.பின்பு எல்லோரும் அமைதியானார்கள்.நானும் கூடத்தான்.

சிறிது நேரத்தின் பின்பு புகையிரத நிலையத்திலிருந்து ஒரு அறிவித்தல் வந்தது,”தயவு செய்து மக்களின் கவனத்திற்கு கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை செல்லும் யாழ்தேவி கடுகதிப் புகையிரதம் இன்னும் சற்று நேரத்தில் 3ம் மேடைக்கு வரும்.திருடர்கள் பலர் மேடையில் உலாவுவதால் மக்கள் தங்கள் நகை ,கையடக்க தொலைபேசி ,பணம் போன்ற பெறுமதியான பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும்.” இவ்வாறான அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு சிறிது நேரத்தில் “அய்யோ அய்யோ என்ர சங்கிலிய அறுத்திட்டு ஓடுறான் அவனப் பிடியுங்கோ என்ற ஒரு அம்மணியின் குரல் கேட்டது சிறிது நேரம் புகையிரத மேடையில் ஒரே அமளி துமளி சற்று சற்று நேரத்தில் அடங்கியது. ஆனாலும் சங்கிலி அறுத்தவன் மட்டும் எஸ்கேப்(Escape). பின்பு அம்மணியின் அழுகை மட்டும் தான் மிச்சம்.

எப்படி இருந்தாலும் மக்கள் சீற் பிடிப்பதில் மும்முரம் காட்டிய வண்ணம் இருந்தார்கள். அந்த நேரம் ரயிலும் மேடைக்கு வந்தது.அடிச்சு பிடிச்சு எல்லோரும் சீற் பிடிக்க ஏறினார்கள்.சில பேர் அதற்குள் இடறுப்பட்டு விழுந்தார்கள்.சமீபத்தில் எனது உறவினர் ஒருவர் இவ்வாறு ஏற முயன்று கால் ஒன்று உணர்ச்சியற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.அது ஒரு புறமுமிருக்க நானும் வவுனியா வரை நின்று போக முடியததால் இவ்வாறு அடிச்சு பிடிச்சு இடம் பிடிச்சேன்.

நான் ஒரு சீற்றுல் இருந்து கொண்டு மற்ற சீற்றில் கொண்டு வந்த சூட்கேசை வைத்தேன்.ஏனென்றால் அழகான பெண்ணுக்கு கொடுக்கத் தான்.சீ…….தப்பா யோசிக்காதீங்க யாரும் இயலாத அல்லது குழந்கையுடன் வரும் பெற்றோருக்கு  கொடுக்கலாம் என்ற ஒரு மனிதாபிமான  நல்லெண்ணம் தான். அதேபோல் ஒரு வயோதிப அம்மா அங்கு தடுமாறிக்கொண்டிருந்தார்.அவரைக் கூப்பிட்டு நான் பிடித்த சீற்றில் அமர்த்தினேன்.பக்கத்தில் இருந்த ஒருவர் என்னை ஒருவாறு முறாத்துப்பார்த்தார்.அதை நான் பொருட்படுத்தவில்லை.

சீற் கிடைக்காதவர்கள் அங்கும் இங்கும் அலை மோதிக்கொண்டிருந்தனர்.இவ்வாறு ரணகளம் நடக்கும் போது நேரம் ஏறத்தாழ 9.45 மணியைக் கடந்திருந்தது.இதற்கு நடுவில் ரயிலின் இன்ஜின் மாற்றப்படும் போது சில விநாடிகள் இருள்மயமாகியது யாழ்தேவி. இதனால் அங்கிருந்த குழந்தைகளின் அழுகைச் சத்தம் கேட்கத்தொடங்கின.இவ்வாறு பல கதைகள் நடந்து கொண்டிருக்க ஒருவாறு நேரம் 10 மணியைக் கடந்தது.கடந்து சில நிமிடங்களில் யாழ்தேவியும் புறப்பட்டது தாண்டிக்குளம் நோக்கி………….

இதன் அடுத்த அனுபவம் வெகு விரைவில்…………..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s