டில்ஷானின் அதிரடியுடன் ஐசிசி சம்பியன் தொடரை முதல் வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை

108521.icon108508.iconஐசிசி சம்பியன் சிப் சுற்றுப் போட்டிகள் நேற்று தென்னாபிரிக்காவின் ஆரம்பமானது.இதில் “பி” பிரிவுக்கான முதலாவது போட்டியில் ஐசிசி தர வரிசையில் முதல் நிலையிலுள்ள தென்னாபிரிக்க அணியும் 5ம் நிலையிலிருக்கும் இலங்கை அணியும் மோதிக் கொண்டன.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணித் தலைவர்  ஸ்மித் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கைக்கு வழங்கினார்.

இரவு பகல் ஆட்டமாக இடம் பெற்ற இந்தப் போட்டியில் இலங்கை  பிரேமதாச விளையாட்டரங்கு போல் நாணயசுழற்சி செல்வாக்கு குறிப்பிடத்தக்களவு இல்லையென்பதால் முதலில் ஸ்மித் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தார். ஆனாலும் இந்த முறை ஐசிசி கோப்பையை வெல்லும்  எதிர்பார்ப்பு அணியாக இலங்கை கணிக்கப்படாததனால் அது தமக்கு ஆறுதல் அளிப்பதாகவும் இந்த போட்டிகளில் நன்றாக விளையாட இது உதவும் என இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்திருந்தார்.

அது போல் நேற்றைய ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் முறையின்  அடிப்படையில் 55 ஓட்டங்களால் வெற்றி பெற்றார்கள்.இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசுரிய 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அண்மைய காலங்களில் ஆரம்பத் துடுப்பாட்ட விரராக களமிறங்கி கலக்கி வரும் ரி.எம் .டில்ஷான் இந்த போட்டியிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.92 பந்தகளுக்கு முகம் கொடுத்து 16 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 106 ஓட்டங்களை எடுத்தார்.இவருடன் இணைந்து ஆடிய குமார் சங்கக்கார 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 54 ஓட்டங்களைப் பெற்றார்.இவர்களுக்கிடையில் 2 வது விக்கெட் இணைப்பாட்டமாக 158 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தமை குறுப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த மகேல ஜெவர்தன மற்றும் சமரவீர ஜோடி 116 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணிக்கு வலுச் சேர்த்தனர்.இதில் தென்னாபிரிக்காவுக்திராக 25 குறைவான சாராசரியைக் கொண்ட மகேல ஜெவர்தன 8 நான்கு ஓட்டங்கள்,1 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 61 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்கஅணி சார்பாக பந்து வீசிய ஸ்ரேன் 9 ஓவர்கள் பந்து வீசி 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும்,பார்னல் 10 ஓவர்கள் பந்து வீசி 79 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 319 ஓட்டங்களைப் பெற்றது.320 என்ற வெற்றி இலக்குடன் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 37.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்களைப் பெற்ற வேளை மழை குறுக்கிட்டது.

பின்னர் போட்டியை தொடர முடியாத காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் அடிப்படையில் இலங்கை அணி 55 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தென்னாபிரிக்க அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அம்லா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணி தடுமாறியது.பின்பு 2 வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் கலிஸ் ஜோடி 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர்.இதில் ஸ்மித் 44 பந்துகளில் 9 நான்கு ஓட்டங்கள்,1 ஆறு ஓட்டங்கள் அடங்லாக 58 ஓட்டங்களையும், 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 44 ஓட்டங்களைப் பெற்றார்.இலங்கை அணிசார்பாக பந்து வீச்சில் அஜந்த மெண்டிஸ் 7 ஓவர்கள் பந்து வீசி 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும்,லசித் மாலிங்க 7.4 ஓவர்கள் பந்துவீசி 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், அஞ்சலோ மத்தீயூஸ் 8 ஓவர்கள் பந்து வீசி 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும்  கைப்பற்றினர் .இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஒரு நாள் போட்டிகளில் தனது 3 வது சதத்தை பூர்த்தி செய்த ரி.எம்.டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டார். இன்று குழு “ஏ” கான போட்டியில் பாக்கிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s