மக்னா காட்டா உடன்படிக்கையும் அதன் உரிமைகளும்(மத்திய காலம்)

Continuity Of Human Right ……….

* 1215 இல் சட்டத்தின் ஆட்சி என்பதன் மேல் கட்டியெழுப்பப்பட்ட மக்னா காட்டாவானது (Magna Carta)பாப்பாண்டவரது நிலப்பரப்பிரபுக்களினதும் நிர்ப்பந்தத்தின் பயனாக ஜோன் மன்னனால் உருவாக்கப்பட்ட ஆவணமாகும்.இது சில சட்டங்களையும்,சட்ட ரீதியான ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்கின்றதொன்றாகும். குறிப்பாக மன்னன் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவனாக மாற்றியது. எனினும் செல்வந்தர்களுக்கு மட்டுமே உரிமைகளை வழங்கியதோடு சாதரண மக்களுக்கு எந்த வித உரிமைகளையும் வழங்கத் தவறியது.

*மக்னா காட்டா என்பது இலத்தீன் மொழியில் மகாபட்டயம் (Great Charter) அல்லது மகா சாசனம் (Great Paper) எனப் பொருள்படுகின்றது.முடியாட்சி அபாயத்தினைப் புலப்படுத்தியமையால் மன்னனின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.(ஜூன் 15ம் திகதி 1215) ,ந்த சாசனத்தில் 63 உறுப்புரைகள் காணப்படுகின்றன.1216,1217,1225 களில் இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

*ஜனநாயக வரலாற்றில் மிக முக்கியமான சட்ட ரீதியான ஆவணமாக இது கருதப்படுகின்றது.12ம் நூற்றாண்டில் ஆங்கில மன்னன் ஐரோப்பாவில் செல்வாக்குப் பரெந்தியவனாக மாற்றம் பெற்றமையும் மத்திய மயப்படுத்தப்பட்ட அராசாங்க முறையும் காணப்பட்டது. ஆனால் 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தாய்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரித்தானிய ஜோன் மன்னன் தோல்விகளைச் சந்தித்தமையானது முடியாட்சியினது அதிகார துஸ்பிரயோகமும் மன்னனுக்கு எதிரான எதிர்ப்புக்கு காலாக அமைந்தது.

* பாப்பாண்டவர் இன்னோசென்ட் (Pope Innocent III) மன்னன் ஜோனுக்கும்(King John) அவர்களது பிரபுகளுக்குமுடையே மன்னனுடைய உரிமைகள் தொடர்பான இணக்கமினமையைத் தொடர்ந்து மன்னன் குறிப்பிட்ட சில உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்தோடு அவனது விருப்பு சட்டத்தினால் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டப்பட்டது.அதாவது மன்னனது விருப்பமானது சட்டத்துக்கு மேலாகவன்றி இருக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.மக்னா காட்டா உடன்படிக்கையே முதல் முதலாக மக்களால் ஆங்கில மன்னனுக்கு குறித்த கட்டுபாட்டினை விதித்த எழுதப்பட்ட ஆவணமாகும்.

* எட்வேட் கோக் (Edward Coke) என்பவர் பிரபுகளின் உரிமைகளை மாத்திரமன்றி முடியாட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அனைத்து மக்களையும் சமத்துவமிடையதாகச் செய்தது. மக்னா காட்டா சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்குமான உத்தரவாதமாகக் கொள்ளப்பட்டது.

>திருச்சபை சுதந்திரமாக இருத்தலும் தனது உரிமைகளைக்     கொண்டிருப்பதும் அதனை வன்முறைப்படுத்தவும் முடியாதிருத்தல்.

>சட்ட முறைக்கு உரிமை உடையவர் எவ்விதமான தாழ்த்தலுக்கு இடமளிக்காது திருமணம் செய்து கொள்ள முடியும்.

>கணவணை இழந்த விதவைகள் எவ்விதமான காலமும் தாழ்த்தாது எவ்விதமான சிக்கலுக்கும் உள்ளாகாது மணம் முடித்துக் கொள்ள முடியும்.கணவன் இறந்து 40 நாள் வரைக்கும் கணவன் வீட்டில் இருக்க முடியுமாகவிருப்பதோடு அக்காலத்தில் தான் சீதனமாக கொண்டு வந்தவற்றினை பெற்றுக்கொள்ளவும் முடியும்.

>எந்தவொரு விதவையும் மறுமணம் செய்ய கட்டாயப்படுத்தப்பட முடியாது.

>எந்தவொரு சுதந்திரமான மனிதனும் சிறியதொரு குற்றச் செயலுக்காக தண்டிக்கப்பட முயாது.

>பெரியதொரு தவறினைச் செய்கின்ற போது அதற்கேற்ற தண்டனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

>எந்தவொரு கிராமமோ தனிப்பட்டவரோ River Bank இல் பாலங்களைக் கட்டுவதற்கு கட்டயாயப்படுத்தப்படக் கூடாது.

>எந்தவொரு மனிதனும் இறுதுப் பத்திரம் எழுதாமல் இறந்து விட்டால் இரத்த உறவுகளுக்கு அல்லது அவரது நண்பர்களுக்கு திருச்சபையின் உதவியுடன் வழங்கப்படவேண்டும்.

தொடரும்…….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s