அற்வைஸ் சொல்லும் நாடோடிகளும் அடிவாங்கிய கந்தசாமியும்

images2மியாவ் மியாவ்  பூனை மீசையில்லா பூனை,எஸ்கீயூஸ் imagesமிஸ்டர் கந்தசாமி,என் பேரு மீனாக் குமாரி என்ற விக்கரமின்  கந்தசாமி பட பாடல்கள் இன்றைய இளசுகளின் நாவில் முணு முணுக்கு பாடல்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. என்னடா எல்லாரும் ஒரே கந்தசாமி கதையா இருக்கிறாங்க எண்டு தியோட்டரில் படம் பார்க்க ஆவல் இல்லாததால்  ஒரு கந்தசாமி DVD Copy ஒண்டு வாங்கிப் பார்த்தேன்.கொலிவுட் படம் போல் பண்ண முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சுசி க​ணேசன். மற்றும் படி அண்மையில் Build Up ஆ வந்த சிவாஜின்ர படத்தை திரும்பப் பார்த்த மாதிரி இருந்திச்சு.இதற்கிடையில் பல புதிய முகங்கங்களுடனும் சில அண்மைய அறிமுகங்களுடனும் சமுத்தரக்கனியின் இயக்கத்தில் உருவான படம் நாடோடிகள் கந்தசாமி கலவரத்திற்கு மத்தியில் இந்த படத்தை பற்றி சிலர் சொல்ல கேட்டேன் “கந்தசாமியியை விட நல்ல படமாம் “ஒரு ஆர்வத்தில் நேற்று தான் அதனைப் பார்த்தேன்.

உண்மையான நட்பு,உறவு,காதல்  மூன்றும் எப்படி இருக்க வேண்டும்,எப்படி இருக்கக் கூடாது என்பதனை இயற்கையாய் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சமுத்தரக்கனி.இன்று பார்த்தால்  பருவ வயது 16 இல் காதல் ஒரு சிந்தனை ,சுயபுத்தி கூட இல்லாமல் பாடசாலை காலங்களை காதல் என்ற பெயரால் வீணாக்கியவர்கள் பலர்.இருப்பினும் இந்த பருவக் காதல் ஒரு சில  சாதனைகளுக்கும்  வழிவகுத்ததை என் அனுபவங்களூடாக நான் கண்ட உண்மை.

தாய் ,தகப்பன் கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பு என்னவென்று தெரியாமலே இன்றைய இளைஞர் யுவதிகள் பலர் இருப்பது கவலைக்குரிய விடயம்.ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளை நல்லா படிச்சு நன்றாக வாழ வேண்டும் என்று வகுப்புக்களுக்கு அனுப்பினால் பிள்ளைகள் பலர் காதல் பாடத்தை படிப்பதிலே ஆர்வம் காட்டுகிறார்கள்.

சற்று சிந்தியுங்கள் உங்களை உங்களால் பாதுகாக்க முடிகிறதா? என்பதை காதல் செய்ய முன்பு சிந்தித்ததுண்டா?என் பார்வையில் காதல் செய்வது தவறல்ல அதை நீங்கள் எந்த சூழ்நிலையில் ,எந்த நிலைமையில் செய்கிறோம் என்பது தான் முக்கியம். அதைவிடுத்து இளமை இருக்கும் போது தான் இதையெல்லாம் செய்யலாம் என்று நீங்கள் நினைப்பீர்களானால் அங்கே தான் வாழ்கையில் முதல் பிழையான முடிவை நீங்கள் எடுக்கிறீர்கள்.உங்கள் பார்வையில் நீங்கள் ஸ்திரமாக (பொருளாதார ரீதியில்) இருக்கிறோம் எனக் கருதும் இடத்து நீங்கள் உங்களுக்கு உகந்த காதலை தேடுவதில் எந்த பிழையும் இல்லை என்பது எனது கருத்து.

இதில் மற்ற பக்கம் நமது பெற்றோர்.விட்ட கதையை இங்கே தொடர்கிறேன் இந்த நாடோடிகள் படத்தில் வரும் சில தகப்பன்மாரை உதாரணமாக காட்டலாம்.சாதி ,மதம்,முன்னிலைப்படுத்தாத பெற்றோராக தகுந்த காதலுக்கு தலையசக்கும் பாத்திரமாகப் படைக்கப்பட்டிருந்தார்கள்.ஆனாலும் இன்றைய சூழலில் எத்தனை பெற்றோர் தகுந்த துணையை தேடினாலும் அதற்கு சம்மதம் சொல்கிறார்கள்.யாராக இருந்தாலும் சிந்தியுங்கள் சிந்தியுங்கள்…..பொருத்தமான தருணத்தில் பொருத்தமான முடிவு எடுப்பது பிள்ளைகளினதும் பெற்றொரினதும் கடமையாகும்.முடிவுகள் தவறுமாயின் பாதிக்கப்படுவது உங்களின் அன்புக்கு பாத்திரமான பிள்ளைகள் ,பெற்றோர்கள்,உங்களது அன்பு உறவுகள் தான்.பழமையானாலும் புதிய பாணியில் சொல்லப்பட்ட நாடோடிகள் திரைப்படம் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஒரு திரைப்படம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s