மனித உரிமைகளும் அதன் இன்றைய வளர்ச்சியும்

இன்றைய உலகில் மனித உரிமைகள் பற்றிய எண்ணக்கரு வளர்ச்சியடைந்து வருகிறது. மனித உரிமை பற்றிய நல்லெண்ண வெளிப்பாடுகள் மேற்குலக நாடுகளினாலே வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.மனித உரிமைகளின் வளர்சிகளுக்கான நிதி,அதன் மேம்பாடுகளுக்கான திட்டங்கள்,அதனை முன்னின்று செயற்படுத்துவது போன்றவற்றில் மேற்குலக நாடுகளே முன்னின்று செயற்பட்டு வருகின்றது.ஆனாலும் ஆசிய நாடுகளினாலேயே மனித உரிமை பற்றிய எண்ணக்கரு தோற்றம் பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன.இந்த தொடர் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ,தற்போது மனித உரிமைகள் பற்றிய கற்கையை மேற்கொள்பவர்களுக்காகவும்,இது பற்றிய தகவல் அறிய ஆர்வமிள்ளவர்களுக்காக வருகிறது இந்தத் தொடர்….

மனித உரிமைகளின் வரலாற்று அபிவிருத்தி(Historical Development Of Human Right)

இனம்,பால்,மதம்,அரசியல் அபிப்பிராயங்கள்,தேசிய அல்லது சமூக அடிப்படைகள்,போன்றவற்றைக கருத்தில் கொள்ளாது மனிதப் பிறப்புக்கள் என்ற வகையில் சகலருக்கும் உரித்தான உரிமைகளே மனித உரிமைகள் என கூறலாம்.இத்தகைய மனித உரிமைகளின் தோற்றத்தினை இலகுவாக விளங்கிக் கொள்வதற்கு உரிமைகளை காலத்தின் அடிப்படையில் மூன்றாக பிரிக்கலாம்.

01. 17ம் நுற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் மனித உரிமைகளின் நிலைமை

02. 17ம் நூற்றாண்டுக்கும்  20ம்  நூற்றாண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் மனித உரிமைகளின் நிலைமை

03. 20ம் நூற்றாண்டுக்கு பின்னரான  காலப்பகுதியில் மனித உரிமைகளின் நிலைமை

உரிமைகளின் வளர்ச்சிப்  போக்கை எடுத்து நோக்கின் நவீன காலத்தின் ஆரம்பம்  வரையிலான(17ம் நூற்றாண்டு வரையிலான )  காலப்பகுதியில் மனித உரிமைகளின் நிலைமை

01. ஒழுக்கத்தின் அடிப்படையில் காணப்பட்டது

02. தத்துவார்த்த ரீதியிலான மனித உரிமைகளை விளங்கிக் கொள்ளப்படாமல் இருந்தமை.

03. எண்ணக்கருவாக மனித உரிமைகள் காணப்பட்டமை

04. இயற்கைச் சட்டம் முக்கியமானதாக காணப்பட்டது.

* ஆரம்ப கால சமூகங்களில் ஒழுக்க ரீதியான நடத்தைகள்,நீதி மற்றும் ஒருமைப்பாட்டு போன்ற சமூக அபிவிருத்தியில் முக்கியமானவையாகக் காணப்பட்டன.

*எழுத்து வடிவங்களைக் கொண்டிராத போதும் மரபு வழிகளினூடாக (செவி மற்றும் வாய் வழியாக)தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டன.

* புராதான நாகரிகங்களான பாபிலோன்,சீனா,இந்தியா போன்றவற்றில் இவை பின்பற்றப்பட்டு வந்துள்ளன.உதாரணமாக பாபிலோனியாவில் ஹமுறாவிச் சட்டங்கள்(1780 B.C) மிக முக்கியமானவை.இது பெண்கள் உரிமைகள்,சிறுவர் உரிமைகள், மற்றும் அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது அதற்கான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் தொடர்பாகக் கூறுகின்றது.பாபிலோனியர்களின் அன்றாட மொழியான ஆக்காடியன் மொழியில் (Akkadian) எழுதப்பட்டதாகும்.இது 282 சட்டங்களைக் கொண்டிருந்தது.

*பேசியன் பேரரசின் Cyrus Cylinder எனப்படுகின்ற சட்டங்களின் தொகுப்பு 6 ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது.

*சீன தத்துவவாதியான மென்சியஸ்(Mencius -372-289 BCE)மனிதத்துவத்தினைப் பற்றி குறிப்பிடுகையில் “பரிவு கொள்ளுவதே மனிதத் துவத்தின் ஆரம்பம்” ,”அவமானமடைதல் மற்றும் விருப்பமின்மையும் நன்னெறியில் வழிபடுத்துவதற்கான ஆரம்பம்” ,”மேலோருக்கு காட்டும் வணக்கத்தோடு கூடிய நன்மதிப்பு மற்றும் கீழ்படிதல் போன்றன வெற்றிக்குக் காரணம்”,”சரி பிழை பற்றி சிந்திக்க ஆரம்பித்தலே அறிவுக்கான ஆரம்பம்”  எனக குறுப்பிடப்பட்டமை மனிதத்துவத்தின் மனிதத்துவத்தின் சிந்தனையை வெளிப்படுத்துகின்றது.

* மெளரியப் பேரரசின் கீழ் அசோக மன்னன் அகிம்சையினை(Non violence)அரச கொள்கையாக கைக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.பிரயாணிகளை வதை செய்வதைத் தடுத்தல்,குற்றவாளிகளை ஒரு வருடத்திற்கு ஒரு தடவை வெளியே வர அனுமதித்தல்,இலவசக் கல்வி ,பொறுமை,கீழ்பணிவு(பெற்றோருக்கு ) , ஆசிரியர்களையும், மதகுருமார்களையும் மதித்தல் நண்பர்களுடன் அன்பாகப் பழகுதல்,தொழிலாளர்களை அன்பாக நடாத்துதல் போன்றவற்றவற்றவற்றினை ஊக்குவித்ததைக் காணலாம்.

* பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்ஸாம், யூத மதங்களில் மனித உரிமைகள் பாதுகாப்பதற்கான ஆவணங்கள் காணப்படுகின்றன.

* ஹீபோகிரட்டீஸின் சத்தியப்பிரமாணம்(The Hippocratic Oath) லவத்தியர்களது கடமைகளையும் அவர்களது தொழில் சார் கடமைகளையும் ஒழுக்க அடிப்படையில் வற்புறுத்துகின்றது.இத்தகைய ஒழுக்க ரீதியான அம்சங்கள் கிரேக்க மற்றும் ரோம் சமூகங்களில் சட்டங்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது.

* ஆதி கிரேக்க காலத்தில் (333 BCE – 264 BCE) காணப்பட்ட தத்துவப் பள்ளியாக விளங்கிய ஸ்ரோய்க்வாதம் (Stoicism) பின்னர் கிரேக்க உரோம பேரரசு காலத்தில் மிகவும் பிரபல்யம் அடைந்ததொன்றதாகக் காணப்பட்டது.இதன் பிரதான தூண்களாக ஒழுக்கம் ,பகுத்தறிவு , மற்றும் இயற்கைச் சட்டம் போன்றன காணப்பட்டன.தமது அகிலமயமான அறிவினைக் கொண்டிரிக்காத நிலையில் தான் அவர்கள் கருணையில்லாமல் இருக்கின்றனர்.மகிழ்ச்சியின்மைக்கும் தீமைக்கும் இதுவே காரணமாகிறது என  ஸ்ரோய்க்வாதம் (Stoicism) குறிப்பிடுகின்றது.கிரேக்க தத்துவவாதிகளான கிளிந்தஸ்(Cleanthes), கிறிசிபஸ்(Chrysippus) போன்றோரும் ரோம தத்துவவாதிகளான சிசரோ, மார்க்கஸ் ஆலியனஸ்( Marcus Aurelius) எபிக்டஸ்(Epictetus), போன்றோர் ஸ்ரொய்க்வாதிகள். இவர்களால் ஒழுக்கம் என்பது நன்மை என்பதன் மீது கட்டியெழுப்பப்பட்டது.சகலருக்கும் நன்மை பயக்கின்ற ஒன்றே ஒழுக்கமுடையதாக இருக்கும் என்பது வலுயுறுத்தப்பட்டது.ஒழுக்கத்தின் மீது அதிக நம்பிக்கை கொணட்டதே ஸ்ரொய்க்வாதமாகும்.பின்னர் அரிஸ்டோடில் மற்றும் பல கிரேக்க தத்துவவாதிகள் பலரும் ஸ்ரொய்க்வாதத்தை ஆதரித்திருந்தமை குறுப்பிடத்தக்கதாகும்.ரோம தத்துவவியலாளர்களான சிசரோ (106BC-43BC)மற்றும் செனேக்கா போன்றோர் அகில ஒழுக்க சமூகமானது இறைவனுடனான தொடர்புகளுடாகவே வடிவமைக்கப்படுகின்றது என்று குறிப்பிபிட்டிருந்தமையினைக் காணலாம்.குறிப்பாக சிசரோ “நீதி என்பது மனிதனுக்கு எந்த விதமான தீமையையும் வழங்காத ஒன்று”  என குறிப்பிட்டமையினைக்  காணலாம்.

மத்திய காலத்தில் அல்பாராபி (870-950) கருத்துக்களானது அரிஸ்டோட்டில் மற்றும் பிளேட்டோ போன்றவர்களின் சிந்தனைகளின் தாக்கத்தினைக் கொண்டிருந்தது.அரிஸ்டோட்டில் மற்றும் பிளாட்டோ போன்றவர்களினது நூல்கள் அரபு மொழயில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் அல்பாராபி கடவுளினால் படைக்கப்பட்ட அனைவரும் நன்மைக்கும் தீமைக்குமான இடைவெளியினை அல்லது வேறுபாட்டினை அனுபவிப்பதற்கு உரித்துடையவர்கள்.முறையான நகரம் என்ற சமூகத்தில் தனிப்பட்ட ஒவ்வொருவரும் உரிமைகளைப் பரிசாகப் பெற்றவர்கள்அன்புடனும் ஆதரவுடனும் தமது அயலவர்களுடன் வாழுதலும் வேண்டும்.எனவும் குறிப்பிடப்பட்டமையினைக் காணலாம்.

*12ம் நூற்றாண்டு வரைக்கும் ஆட்சியாளர் அல்லது மன்னன் கடவுளுக்கு சமமாக அல்லது அதற்கு மேலாகவோ கருதப்படக்கூடிய நிலைமை காணப்பட்டதோடு மக்கள் மீது சகல அதிகாரங்களையும் ஆட்சியாளர்கள் கொண்டிருந்தமையைக் காண முடிகிறது.

குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s