டில்ஷானின் முழுப் போட்டி அதிரடியும் மஹேல மற்றும் சமரவிரவின் நிதானமான ஆட்டமும் கைகொடுத்தது இலங்கைக்கு முதல் வெற்றி

107144.iconநேற்று  காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமான107157.icon சுற்றுலா  நியுசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயானமுதலாவது டெஸ்ட் போட்டியில்  டில்ஷானின் அதிரடி மற்றும் மஹேல ஜவர்த்தனவின் நிதானமான ஆட்டத்தின் மூலம் இலங்கை அணி வலுவான நிலையை எட்டியது.

நாணய  சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணித் தலைவர் டானியல் விட்டோரி முதலில்  துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை இலங்கை அணிக்கு வழங்கினார்.இலங்கை அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய  டில்ஷான் மற்றும் தரங்க பரணவிதரன களமிறங்கினர்.நியுசிலாந்து அணியின் துல்லியமான பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் கிறிஸ் மாட்டினின் போட்டியின் முதலாவது ஓவரின் மூன்றாவது பந்து வீச்சில் தரங்க பரணவித்தாரண ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.அதைத் தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் குமார் சங்கக்கார கிறிஸ் மாட்டினின் பந்து வீச்சில் எட்டு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்பு ஜோடி சேர்ந்த  மஹேல ஜவர்த்தன மற்றும்  டில்ஷான் ஆகியோரின் சிறப்பான 118 ஓட்ட இணைப்பாட்டமானது இலங்கையை ஸ்திரமான நிலைக்கு இட்டுச்சென்றது.இதில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய டில்ஷான் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சார்பாக குறைந்த பந்தில் அரைச்சதத்தை கடந்த இலங்கை வீரர் என்ற பெயரையும் பதிவு செய்தார்.இவர் 72 பந்துகளில் 12 நான்கு ஓட்டங்கள்,ஒரு ஆறு ஓட்டம் அடங்லாக 92 ஓட்டங்களைப் பெற்று ஓ பிறயினின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்பு ஜோடி சேர்ந்த மஹேல ஜவர்த்தன மற்றும் சமரவிர ஜோடி முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்படும் வரை பிரிக்கப்படாத 159 ஓட்டங்களைத் தமக்கிடையே பகிர்ந்தனர்.இதில் மஹேல ஜவர்த்தன ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும், சமரவிர ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.சிரற்ற காலநிலை காரணமாக முதல் நாள் ஆட்டம் 78 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.1வது நாள் ஆட்ட முடிவின் போது இலங்கை அணி 3 விக்கட் இழப்புக்கு 293 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.2 வது நாள் ஆட்டம் சீரற்ற காலநிலை காரணமாக 12 மணியளவில் ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மஹேல ஜவர்த்தன மற்றும் சமரவிர ஜோடி களமிறங்கியது.மஹேல ஜவர்த்தன 114 ஓட்டங்களைப் பெற்று ஓ பிறயினின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.தற்போது இலங்கை அணி தனது முதல் இனிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 452 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.இதில் ஆட்டமிழக்காமல் சமரவிர 24 நான்கு ஓட்டங்கள்,ஒருஆறு ஓட்டம் அடங்கலாக 159 ஓட்டங்களையும் பெற்றார்.தொடர்ந்து தனது 2வது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி மக்கின்ரோஸ்சின் 69 ,ரைடர் 42,விட்டோரி 42 ஓட்டங்களுடன் தனது முதல் இனிங்சிக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து  299 ஓட்டங்களைப் பெற்றது.இதன் மூலம் பேஃலோ ஓன்(Follow on)யைத் தவிர்த்தது.இலங்கை சார்பாக பந்து வீச்சில் சிறப்பாக செயற்பாட்ட முத்தையா முரளீதரன் 42 ஓவர்கள் பந்து வீசி 10 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 73 ஓட்டங்களைக் கொடுத்து  4 விக்கெட்டுக்களையும்,திலான் துசார 23 ஓவர்கள் பந்து வீசி 2 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 81 ஓட்டங்களைக் கொடுத்து  4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.தொடர்ந்து 2 வது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக மீண்டும் ஒரு முறை அதிரடியை வெளிப்படுத்திய டில்ஷானின் ஆட்டத்தின் மூலம் 259 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது.இதில டில்ஷான் 131 பந்துகளை எதிர்கொண்டு  12 நான்கு ஓட்டங்கள்,ஒரு ஆறு ஓட்டம் அடங்லாக 123 ஓட்டங்களைப்  ஆட்டமிழக்காமல் பெற்றார்.412 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 210 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக் கொண்டது.மீண்டும் ஒரு முறை தனது தலைமையை உணர்ந்து செயற்பட்டு 67 ஓட்டங்களைப் பெற்றார்.இருப்பினும் இலங்கை அணியின் சகல துறை ஆட்டத்தினால் நியூசிலாந்து தோல்வியைத் தடுக்க முடியாது போனது.இலங்கை அணி சார்பாக முத்தையா முரளீதரன் 88 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையிம்,துசார மற்றும் மெண்டிஸ் ஆகியோர்  தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு தமது பங்களிப்பைச் செய்தனர்.இதில் முதல் இனிங்சில் 92 ஓட்டங்களையும் ,2 வது இனிங்சில் 123 ஓட்டங்களையும் பெற்ற திலகரட்ன டில்ஷான் போட்டியின் சிறப்பாட்டகாரராக தெரிவு செய்யப்பட்டார்.இலங்கை மற்றும் நியூச்சிலாந்து அணிகளுக்கிடையான 2 வது டெஸ் போட்டி எதிர் வரும் 26 ம் திகதி எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை ஸ்கோர் விபரம்

திலகரட்ண டில்ஷான்                  92

மஹேல ஜவர்த்தன                      114

குமார் சங்கக்கார                             08

தரங்க பரணவித்தாரண               00

திலான் சமரவிர                               159

அஞ்சலோ மத்தீயூஸ்                   39

பிரசன்ன ஜவர்த்தன                      07

நுவான் குலசேகர                            18

திலான் துஷார                                   00

முத்தையா முரளீதரன்                 08

அஜந்த மெண்டிஸ்                          07

மொத்தம்                                              452

நியூசிலாந்து  பந்து வீச்சு விபரம்

கிறிஸ் மாட்டின்                     23 ஓவர் ,4 விக்கெட்

ஓ பிறயின்                                 21ஓவர் ,1 விக்கெட்

டானியல் விட்டோரி          37.4ஓவர் ,4 விக்கெட்

நியூசிலாந்து அணி முதல் இனிங்ஸ் ஸ்கோர் விபரம்

மக்கிரொஸ்              69

குப்ரில்                         24

பிஃலைன்                  14

பட்டேல்                      26

ரெயிலர்                      35

றைடர்                         42

மக்கலம்                     01

ஓராம்                           12

விட்டோரி                 42

ஓ’பிறையின்          01

மாட்ரின்                     12

இலங்கை முதலாவது இனிங்ஸ் பந்து வீச்சு விபரம்

முத்தையா முரளீதரன்  42 ஓவர் ,4 விக்கெட்

திலான் துஷார                    23ஓவர் ,4 விக்கெட்

இலங்கை 2வது இனிங்ஸ் துடுப்பெடுத்தாட்ட விபரம்

திலகரட்ண டில்ஷான்                  123*

மஹேல ஜவர்த்தன                      27

தரங்க பரணவித்தாரண               05

திலான் சமரவிர                               20

பிரசன்ன ஜவர்த்தன                      30+

குமார் சங்கக்கார                             46

நியூசிலாந்து 2வது இனிங்ஸ்  பந்து வீச்சு விபரம்

ஓ’பிறையின்   8 ஓவர் 1 விக்கெட்

விட்டோரி     19 ஓவர் 1 விக்கெட்

பட்டேல்      12 ஓவர் 1 விக்கெட்

நியூசிலாந்து 2வது இனிங்ஸ்  துடுப்பெடுத்தாட்ட விபரம்

மக்கிரொஸ்              00

குப்ரில்                         18

பிஃலைன்                  00

பட்டேல்                      22

ரெயிலர்                      16

றைடர்                         24

மக்கலம்                     29

ஓராம்                           21

விட்டோரி                 67

ஓ’பிறையின்          05

மாட்ரின்                     00*

இலங்கை இரண்டாவது இனிங்ஸ் பந்து வீச்சு விபரம்

முத்தையா முரளீதரன்  27 ஓவர் ,3விக்கெட்

திலான் துஷார                    14ஓவர் ,2 விக்கெட்

அஜந்த மெண்டிஸ்           18.5ஓவர் ,2 விக்கெட்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s