உடப்பில் இறால் வளா்ப்பு

1993.94ஆம் ஆண்டுகளில் கைதொழிலாக இறால் கைதொழில் உருவெடுத்தது. இவ் தொழிலானது தற்போது வரை பரம்பரை தொழிலாக செய்து வரப்படுகின்றது. இலங்கை என்ற நமது அழகிய நாட்டை சுற்றி உவர் நீர் காணப்பட்டபோதும் இறால் உற்பத்தி செய்வதற்கு உகந்த நிலங்க் குறைவாகவே காணப்படுகின்றது.

இதன் காரணமாகவே இறால் பண்ணைகளின் பரம்பலும் இலங்கையில் ஒரு குறித்த பகுதிகளிம் மட்டுமே காணப்படுகின்றது.

வடமேல் மாகணத்தில் இறால் வளர்ப்பானது 120கிலோமீற்றர் நீளமும்  10கிலோமீற்றர் அகலமும் நிலபரப்பை கொண்டு காணப்படுகின்றது. சிலாபம் கடல்நீரேரி, முந்தல் கடல்நீரேரி , புத்தளம் கடல்நீரேரி முதலானவை இவ் மாகணத்தில் அடங்குகின்றன.அந்தவகையில் நிலமானது களப்பு கடனீரேரியை கொண்ட பிரதேசமாகவும் உவர்நீரை கொண்டதாகவும் காணப்பட வேண்டும். இதேவேளை இறால் வளர்ப்புக்கு நில பசளையானது 75 சதவீதம் தேவை.  ஆந்த வகையில் இவ் அனைத்து அம்சங்களையும் கொண்டு உடப்பு பிரதேசம் காணப்படுகின்றது. IMG_2883இவ் பிரதேசத்தில் அங்கிகரிக்கப்பட்ட பண்ணைகளும் சட்டபூர்வமற்ற பண்ணைகளும் பாரிய நிலபரப்பில் காணப்படுகின்றது. இவை அனைத்தும் சூழழையும் மனிதனையும் கவனத்தில் கொள்ளாது வர்த்தக நோக்கை மட்டும் கவனத்தில் கொண்டு இறால் பண்ணையாளர்கள் தொழில் செய்து வருகிறார்கள்.

IMG_2890

இங்குள்ளவர்கள் 70 வீதம் இறால் பண்ணை தொழிலில் ஈடுபடுகின்றனர். இறால் கைத்தொழிலானது இரண்டு விதமாக செய்யப்படுகின்றது. நன்னீர் இறால் வளர்ப்பு, உவர்நீர் இறால் வளர்ப்பு முதலானவையாகும். இவ்வாறான நீரியல் வளர்ப்பு விவசாய முறைகள்தான் இன்றைய சூழலில் நிலை பேனுகைக்கு சவால்விடும் காரணிகளாக இருந்து வருகின்றன.
அதாவது நீர்யல் வளர்ப்பு தொழிலானது நீர் சூழலில் வாழக்கூடிய உயிர்உள்ள இயற்கையான விலங்குகளை மனிதன் தன் சுய தொழிலின் மூலம் உருவாக்கி ஒருபலனை பெறுவதாகும். ஆனால் இவ்வாறு செய்யப்படும் நீரியள் வளர்ப்பு முறைகளில் ஒன்றான இறால் பண்ணை கைதொழிலானது பயனை பெற்று கொடுப்பாதாக இருந்தாலும்  உடப்பு
இறால் பண்ணையாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறு வளர்க்ப்படும் இறால்கள் இதுவரை காலமும் மனித உனவிற்காகவம் இமீன்களின் இரைகளுக்காகவும் இஅலங்கார வளர்ப்புகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றது. இவ்வாறு இறால் தொழிலில் பல இன இறால்கள் வளர்க்கப்படுகின்றது. IMG_2896இதில் பொதுவாக அரியவகை இறால்களான எஸ்பிஃ எப் எல் மற்றும் வெள்ளை இறால் முதலானவை மிகவும் வேகமாக இறால் பண்ணையாளர்களால் செய்து வரப்படுகின்றது. இதனால் இலங்கைக்கு ஏற்றுமதி மூலம் சிரிய அன்ணிய செலாவனியை பெற்று கொடுப்பதாக இருக்கின்றது. இவ்வாறு சுயநலத்திலும் பொருளாதாரத்திலும் மயக்கமாக உள்ள பண்ணையாளர்களும் இமுதலீட்டு ஊக்குவிப்பாளர்களும் இத்தொழிலால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கேடுகளை பற்றி சற்று சிறிதும் நினையாத போதும் அதற்கான எவித தீர்மானங்களையும் மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். இவ் இறால் கைத்தொழிலில்ஈடுப்படும் அனைவரும் தமது தொழில் நலன்களை மட்டும் கருத்திற் கொண்டு சூழலுக்கும்மனிதனுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை பற்றி சற்றும் நினையாதுதூர எறிந்து விட்டனர். இறாலின் தேவையானது சர்வதேச மட்டத்திலும் மிக அதிகமாகவே காணப்படுகின்றது. அதாவது அமெரிக்கா . ஜப்பான் .ஐரோப்பிய நாடுகள் முதலான நாடுகளில் இறாலின் தேவை அதிகமாக இருந்த போதும் அங்கு இடம் பெறும் பண்ணை தொழிலால் அங்குள்ள சுற்றாடலுக்கும் .மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவாறே காணப்படுகின்றது.ஆனால் இலங்கையில் தேசிய மட்டத்தில் இறால் உற்பத்தியானது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

மேலை நாடுகளில் இறால் தேவை அதிகமாக காணப்படுகின்ற போதும் இலங்கையை பொறுத்த வரையில் ஏற்றுமதி குறைவாகவே காணப்படுகின்றது. IMG_2902இவ்வாறு சிறிதளவு கைத்தொழிலால் சமூகத்திற்கு ஏற்படும் பிரச்சினைகளானது கூடுதலாக காணப்படுகின்றது. இருந்த போதும் பல முதலீட்டு சபைகளும். ஆமச்சுகளும் இத்தகைய இறால் வளர்ப்பு போன்ற நீரியள் வளர்ப்பு முறைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என தம்பட்டம் அடித்து கொண்டு தெரிகின்றனர். இதன் நிமித்தம் பல தனியார் கம்பனிகளும் .கூட்டரவு சங்கங்களும் வங்கிகளும் போட்டியிட்டுக் கொண்டு உதவி செய்கின்றது. இவற்றின் நோக்கமோ பொருளாதாரம் .ஆனால் ஒருபுறம் மனிதன் துன்பத்தில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றதை மறந்து விட்டனர்.
இவ்வாறு பல இறால் பண்ணைகள் அதிகரித்தது வருகின்றதால் அவ் பண்ணைகளை சூழ்ந்த சூழலுக்கும் மனிதர்களுக்கும் பல துன்பங்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பதை கண்டும் கானாதவர்களாய் இருக்கின்றனர். இவ்வாறு உடப்பு பிரதேசத்தில் நடைமுறையில் இருந்து வருகின்ற பண்ணை முறைகளால் அவ் பிரதேசத்தை அண்டி வாழ்கினற மக்கள் உட்பட சூழக்கும் இவ் இறால் தொழில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இவ்வாறு வடமேல் மாகணத்தில் 68 கடல் நீரேரிகளில் உடப்பும் ஒன்றாகும். இங்கு வாழும் மக்களினதும் உயிரினங்கனினதும் பௌதீகரீதியாக பலர் இறால் பண்ணை தொழிலால் பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s