பள்ளி பருவத்தில்
என்னூள் வந்த உன் நினைப்பு
தசாப்தம் ஒன்று கடந்த போதும்
மாறவில்லை மறக்கவில்லை
சொல்லத்தான் நினைத்தேன்
தடுத்தது என்நிலை அன்று
நினைப்பு வந்தவுடன்
நிழலாய் தொடர்ந்தேன் சில நாட்கள்
நீயே அறியாமல் …….
பூப்பூத்த உன் நினைவுடன்
பிரிந்து சென்றேன் உன்னை
சூழ் நிலைக் கைதியாய் அன்று நான்
பார்க்க துடித்தேன் உன்னை
பேசத் துடித்தேன் உன்னுடன்
முயன்ற ஒரு தருணம்
சந்தித்தேன் மீண்டும் உன்னை ஒருமுறை
வார்த்தையில் தடுமாற்றம்
அந்த இறுதி நிமிடம்
நீக்காத நினைவாய் இன்றும் என்னூள்ளே
வருடங்கள் 11 கடந்த போதும்
வேறொரு பெண் வரவில்லை என்னூள்ளே
ஒரு தசாப்த தேடலுக்கு
முகப்பு புத்தகம் விடை தந்தது
பிறந்த நாள் பரிசாக
அன்று தான் நான் உன்னை கண்டறிந்தேன்
9 Dec
நினைவுகள் ……
Advertisement