பாகிஸ்தானில் 3 தசம் 5 மில்லியன் சிறுவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதாக ஐக்கியநாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 3 தசம் 5 மில்லியன் சிறுவர்கள் நீர் சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகும் அபயாம் அதிகளில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தென் பகுதி மாகாணங்களான சிந்து மற்றும் அதற்கு அண்மையிலுள்ள பாலோசிரான் பகுதிகள் தொடர்ந்தும் வெள்ளத்தினால் பாரிய அழிவைச் சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்
இந்த மாகாணங்களில் வசித்த பலர் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்
பாகிஸ்தானுக்கு விஐயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெள்ளம் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தப் பகுதிகளிலுள்ள சிறுவர்கள் டயரியா மற்றும் வாந்திபேதி போன்ற நீர் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக மனிதாபிமானத்துக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மவ்றிசோய் கீயூலியானோ தெரிவித்துள்ளார்.
இந்த நோய்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்க சுத்தமான குடிநீர் தேவைப்படுவதாகவும் வெள்ளத்தினால் பாகிஸ்தானில் நீர் நிலைகள் அசுத்தமடைந்துள்ளதால் நீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் கூறியுள்ளார்.
கொலாரா போன்றவற்றிலிருந்து பாதுகாக்க உலக சுகாதார ஸ்தாபனம் பல்வேறு தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றது.எனினும் கொலாராவினால் பாதிப்பட்டவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென ஐக்கிய நாடுகள் சபையை மேற்கோள்காட்டி பாகிஸ்தான் அரசாங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நோய் தாக்கத்துக்கு அண்ணளவாக ஆறு மில்லியன் மக்கள் உள்ளாகும் ஆபத்து இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் அச்சம் உள்ளதாக பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் மெஹ்மூட் குரோஷி கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் சிந்து மற்றும் பலோசிற்ரான் மாகாணங்களின் தெற் பகுதிகளில் மேலதிக இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தினை காட்டி ஆயுததாரிகள் இலாபம் அடைய இடமளிக்கப்படமாட்டாது என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சிந்து மாகாணத்தில் பிரதான வீதிகள் பல தடைப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 460 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்ற போதிலும் இதுவரை 125 மில்லியன் அமெரிக்க டொலர்களே வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
இந்தப் பகுதிகளுக்கு நேற்று விஐயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உதவிகளை விரைவுபடுத்ததும் படி வலியுறுத்தியிருந்தார்.ஐக்கிய நாடுகள் சபையின் அவசரநிலைமைகளுக்குப் பொறுப்பான நிலையமத்தின் நிதியில் இருந்து மேலதிகமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
அத்துடன் 459 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிவாரணப் பணிகளுக்கான தேவைப்படுவதாக கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது.நீண்ட கால அடிப்படையில் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுமெனவும் ஐக்கியநாடுகள் சபை கூறியிருந்தது.
ஐந்தில் ஒரு பங்கு பாகிஸ்தான், வெள்ளத்தால் அழிவுகளைச் சந்தித்துள்ளதாகவும் பான் கீ மூன் குறிப்பிட்டிருந்தார்.பாகிஸ்தான் அரசாங்கத்தின் தகவல்களின் படி இதுவரை 20 மில்லியன் மக்கள் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதோடு குறைந்ததது 1500 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு வாரங்களுக்கும் அதிகமாக பாகிஸ்தானின் நான்கில் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருந்ததுடன் பல விவசாய நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தது.
இந்த அனர்த்தம் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் நீண்ட காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமென சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போரிட அமெரிக்க ஏற்கனவே 70 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது.